கோவை, ஜன. 29-
சட்ட விரோதமாக மது விற்பனை நடைபெறுவதை தடுக்கக்கோரி கோவை மாவட்ட ஆட்சியரிடம் பெண்கள் புகார் மனு அளித்தனர்.

கோவை மாவட்டம், கருமத்தம்பட்டி அருகே வாகராயம் பாளையத்தில் இயங்கி வரும் டாஸ்மாக் கடையினால் பொதுமக்களுக்கு பெரும் இடையூறு ஏற்பட்டு வருகி
றது. எனவே இந்த மதுபானக் கடையினை உடனடியாக அகற்ற வேண்டும். மேலும், அப்பகுதியில் உள்ள சாலையோர உணவு விடுதிகள் மற்றும் குடியிருப்புகள் பகுதிகளில் சட்டவிரோதமாக மது விற்பனை நடைபெற்று வருகிறது. இதனால், மாணவர்கள் அதிகளவில் மது போதை பழக்கத்திற்கு உள்ளாகி வருகின்றனர். இதேபோல், இப்பகுதியில் கஞ்சா விற்பனையும் அதிகரித்து வருகிறது. இத்தகைய சட்டவிரோத போதை பொருட்களை விற்பனை செய்யும் நபர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக்கோரி அப்பகுதி பெண்கள் 20க்கும் மேற்பட்டோர் திங்களன்று கோவை மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தனர்.

Leave A Reply

%d bloggers like this: