புதுதில்லி; 
மின் வசதி இல்லாத கிராமங்களில் சுமார் 4 கோடி வீடுகளுக்கு மின் இணைப்பு வழங்கப்பட்டுள்ளன. முன்னேறுவதற்கான வாய்ப்பை ஏழைகள் பெற்றுள்ளனர். 15 கோடி எல்.இ.டி பல்புகள் விநியோகம் மூலம், மின் கட்டணத்தில் ரூ 40 ஆயிரம் கோடி சேமிக்கப்பட்டு உள்ளது.2014-இல் கிராமங்களில் 56 சதவிகிதமாக இருந்த சாலை வசதி, தற்போது 82 சதவிகிதமாக உயர்ந்துள்ளது. 2019-ஆம் ஆண்டுக்குள் அனைத்து கிராமங்களுக்கும் சாலை வசதி ஏற்படுத்தித்தரப்படும்.

தொழில் தொடங்கும் வழிமுறைகள் எளிமையாக்கப்பட்டுள்ளன. தொழிலாளர்களின் குறைந்தபட்ச கூலியை 40 சதவிகிதம் வரை அரசு உயர்த்தியுள்ளது.தீனதயாள் அம்ருத் யோஜனா திட்டத்தின் கீழ் மலிவு விலையில் உயிர் காக்கும் மருந்துகள் விற்பனை செய்யப்படுகிறது. 111 இடங்களில் 60 சதவிகிதம் முதல் 90 சதவிகிதம் சலுகை விலையில் 5,200 உயிர் காக்கும் மருந்துகள் விற்பனை செய்யப்படுகின்றன.

Leave A Reply

%d bloggers like this: