கோவை, ஜன. 29-
ஈஷா யோகா மையம் ஆக்கிரமித்த பழங்குடியினருக்கு சொந்தமான 44 ஏக்கர் நிலத்தை மீட்கக்கோரி கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு பழங்குடியின பெண்கள் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

கோவை அருகேயுள்ள முட்டத்துவயல் பகுதியில் நில உச்ச வரம்பு சட்டப்படி உபரி நிலமாக அறிவிக்கப்பட்ட 44.30 ஏக்கர் நிலம் கடந்த 1992ம் ஆண்டு முட்டத்துவயல், மட்டத்துகாடு, சவகாடு, படக்காடு, கொளத்தேறி மேடு உள்ளிட்ட பகுதியில் வசித்து வந்த பழங்குடியின மக்களுக்கு ஒப்படைக்கப்பட்டது. இதில் ஒப்படைப்பு செய்யப்பட்ட அந்த நிலத்தை, போலி ஆவணங்கள் மூலம் ஈஷா யோகா மையம் கைப்பற்ற முயன்று வருகிறது. இந்நிலையில் அந்நிலத்தை ஈஷா யோகா மையத்தினரிடமிருந்து மீட்கக்கோரி திங்களன்று கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு பழங்குடியின பெண்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதனை தொடர்ந்து மாவட்ட ஆட்சியர் த.ந.ஹரிஹரனை சந்தித்து புகார் மனு அளித்தனர்.

Leave a Reply

You must be logged in to post a comment.