ஈரோடு, ஜன.29-
அரசாணையின்படி ஊதிய உயர்வு வழங்கக்கோரி துப்புரவு தொழிலாளர்கள் ஈரோடு மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மனு அளித்தனர்.

டேங்க் ஆப்ரேட்டர்கள் மற்றும் துப்புரவு பணியாளர்களுக்கு அரசாணை 303ன்படி 7 ஆவது ஊதியக் குழுவின் அடிப்படையில் ஊதிய உயர்வும், அரசாணை எண் (2டி) 62ன் படி குறைந்தபட்ச ஊதியம் நிர்ணயம் செய்திட வேண்டும். இதற்கான அரசாணை வெளியிடப்பட்டு நான்கு மாதங்களாகியும் இதுவரை ஊதிய மாற்றம் செய்யாமல் காலதாமதம் செய்யப்பட்டு வருகிறது. இதனால் தொழிலாளர்கள் மிகுந்த ஏமாற்றத்திற்கும், சிரமத்திற்கும் உள்ளாகி உள்ளனர். எனவே, அரசாணைப்படி உடனடியாக ஊதிய உயர்வு வழங்க வேண்டும் எனக்கோரி ஈரோடு மாவட்ட வருவாய் அலுவலர் ச.கவிதாவிடம் திங்களன்று கிராம பஞ்சாயத்து டேங்க் ஆபரேட்டர்கள் மற்றும் துப்புரவு பணியாளர்கள் மனு அளித்தனர்.

Leave A Reply

%d bloggers like this: