ராமேஸ்வரம்,

ராமேஸ்வரம் மீனவர்கள் 12 பேரை இலங்கை கடற்படையினர் கைது செய்தனர்.

நெடுந்தீவு அருகே மீன் பிடித்துக் கொண்டிருந்த ராமேஸ்வரத்தை சேர்ந்த 12 மீனவர்களை எல்லை தாண்டி மீன் பிடித்ததாக கூறி இலங்கை கடற்படையினர் கைது செய்தனர்.மேலும் அவர்களது 2 படகுகளையும் சிறைபிடித்து சென்றனர். கைது செய்யப்பட்ட மீனவர்கள் தலைமன்னாருக்கு அழைத்து செல்லப்பட்டு அவர்களிடம் விசாரணை நடைபெற்று வருகிறது.

கடந்த 2 நாட்களுக்கு முன் எல்லை தாண்டி வரக்கூடிய படகுகளுக்கு ரூ.10 லட்சத்தில் இருந்து ரூ. 17 கோடி வரை அபராதம் விதிக்கும் மசோதா இலங்கை நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

You must be logged in to post a comment.