கோவை, ஜன. 28 –
பேருந்து கட்டண உயர்வை தமிழக அரசு முழுமையாக ரத்து செய்ய வேண்டும் என கோரி இடிகரையில் மார்க்சிஸ்ட் கட்சி சார்பில்ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

முன்னதாக கட்சியின் கிளைச்செயலாளர் சண்முகம் தலைமை வகித்தார். கோரிக்கைகளை விளக்கி சிபிஎம் கோவை மாவட்டச்செயலாளர் வி.ராமமூர்த்தி, எஸ்.எஸ்.குளம் ஒன்றிய செயலாளர் கோபால் ஆகியோர் கண்டன பேசினர். கூட்டத்தில் இடிகரை சிபிஎம் அலுவலகத்தை தாக்கிய சங்பரிவார் அமைப்புகளின் நடவடிக்கைக்கு கடும் கண்டனம் தெரிவிக்கப்பட்டதோடு, எச்சரிக்கையும் விடுக்கப்பட்டது. ஆர்ப்பாட்டத்தில் ஏராளமானோர் பங்கேற்றனர்.

Leave A Reply

%d bloggers like this: