சென்னை, ஜன.28-
தமிழ்நாட்டில் பிறப்பு, இறப்புகளை பதிவு செய்வது இலவசமாக செய்யப்பட்டு வருகிறது. சில சேவைகளுக்கு மட்டும் கட்டணம் வசூலிக்கப்பட்டு வந்தது. இப்போது பிறப்பு, இறப்புகளை பதிவு செய்வதில் கட்டணம் உயர்த்தப்பட்டு இருக்கிறது.

இதுகுறித்து பொது சுகாதார துறை இயக்குநர் குழந்தைச்சாமி கூறியதாவது:-தமிழ்நாட்டில் அரசு மருத்துவமனை தனியார் மருத்துவமனை, ஆரம்ப சுகாதார நிலையங்களில் பிறக்கும் அனைத்து குழந்தைக ளுக்கும் பிறப்பு மற்றும் இறப்பு சான்றிதழ்கள் வழங்கப்பட்டு வருகிறது. ஆன்லைனிலும் பதிவு செய்ய கட்டணம் கிடையாது. மருத்துவமனைகளில் பிறக்கும் குழந்தைகள் மருத்துவமனையில் இருந்து வீட்டுக்கு செல்லும் போது பிறப்பு சான்றிதழ் இலவசமாக வழங்கப்படுகிறது. இதனால் ஏழைகள் யாரும் பாதிக்கப்படவில்லை.

ஒரு மாதம் வரைக்கும் பிறப்புமற்றும் இறப்புகளை பதிவு செய்யாமல் அதன் பிறகு செய்பவர்களுக்கு கட்டணம் ரூ.2-ல் இருந்து ரூ.100 ஆக உயர்த்தப்பட்டு இருக்கிறது. 30 நாட்களுக்கு மேல் ஒரு வருடம் வரை பதியாமல் இருப்பவர்க ளுக்கு ரூ.5-ல் இருந்து ரூ.200 ஆகவும், ஒரு வருடத்திற்கு மேல் பதியாமல் இருப்பவர்களுக்கு ரூ.10-ல் இருந்து ரூ. 500 ஆக கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளது. குழந்தை பிறந்து ஒரு வருடத்திற்கு மேல் பெயரை பதிவு செய்யாமல் இருப்பவர்களுக்கான கட்டணம் ரூ.5-ல் இருந்து ரூ.200 ஆக உயர்த்தப்பட்டு இருக்கிறது. சிலர் பிறந்த தேதியை மாற்றி பதிவு செய்வதாலும் முறைகேடுகளில் ஈடுபடுவதாலும் கட்டணம் உயர்த்தப்பட்டு இருக்கிறது. மத்திய அரசு ஒப்புதலுடன் கடந்த அக்டோபர் மாதம் முதல் கட்டண உயர்வு நடைமுறையில் இருக்கிறது. அடுத்த மாதம் முதல் உலகில் எந்த பகுதியில் இருந்தாலும் பிறப்பு மற்றும் இறப்பு சான்றிதழ்களை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். இவ்வாறு அவர் கூறினார்.

Leave A Reply

%d bloggers like this: