கோவை, ஜன. 28 –
துப்புரவு பணிகளில் ஈடுபடும் தொழிலாளர்களுக்கு இலவச பேருந்து அட்டை வழங்க வேண்டுமென ஊரகவளர்ச்சி உள்ளாட்சித்துறை ஊழியர் சங்கத்தின் மாநில சம்மேளன கூட்டம் வலியுறுத்தியுள்ளது.

தமிழ்நாடு ஊரகவளர்ச்சி உள்ளாட்சித்துறை ஊழியர் சங்கத்தின் மாநில சம்மேளன கூட்டம் சிஐடியு கோவை மில்தொழிலாளர் சங்க கூட்டரங்கில் சனிக்கிழமை நடைபெற்றது.சங்கத்தின் மாநிலதலைவர் நா.பாலசுப்பிரமணி தலைமையில் நடைபெற்ற மாநிலக்குழு கூட்டத்தில் சங்கத்தின் மாநில பொதுச்செயலாளர் கே.ஆர்.கணேசன்மற்றும் மாநில நிர்வாகிகள் ப.சண்முகம், ஆர்.
பாலசுப்பிரமணி, கே.ரத்தினகுமார் உள்ளிட்ட மாநிலக்குழு உறுப்பினர்கள் பங்கேற்றனர்.முன்னதாக ஊராட்சிகளில் பணிபுரியும் மேல்நிலைதொட்டி இயக்கும் துப்புரவு தொழிலாளர்களுக்கு குறைந்தபட்ச ஊதிய அரசாணைப்படி ஊதியம் வழங்க வேண்டும், 7ஆவது ஊதியக்குழுபரிந்துரைப்படி காலமுறை ஊதியத்தை துப்புரவு பணியாளர்களுக்கு ஊதிய உயர்வு, ஐம்பதாயிரம் பணிகொடை மாதம் ரூ.2 ஆயிரம் ஓய்வூதியம் ஆகியவற்றை நடைமுறைப்படுத்த வேண்டுமென இக்கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

இக்கோரிக்கைகளை வலியுறுத்தி மக்கள் மத்தியில் பிப்ரவரி மாதத்தில் தொடர் பிரச்சாரம் மேற்கொள்வது, மார்ச்13ல் ஆட்சியரிடம் மனுகொடுப்பது, ஏப்ரல் 9 ஆம்தேதி காத்திருப்பு போராட்டம் நடத்துவது என மாநிலக்குழு தீர்மானம் நிறைவேற்றிள்ளது. மேலும், மக்கள் தொகை வளர்ச்சிக்கேற்ப கூடுதல் துப்புரவு தொழிலாளர்களை நியமித்திட வேண்டும், துப்புரவு பணிகளை தனியார் மயப்படுத்தும் நடவடிக்கைகளை கைவிட வேண்டும், கிராமங்களில் இருந்து நகரங்களுக்கு தூய்மைப்பணிக்காக அதிகாலையிலேயே துப்புரவு தொழிலாளர்கள் பேருந்தில் பயணம் செய்து வருகிறார்கள். தற்போது தமிழக அரசு உயர்த்தியுள்ள பேருந்து கட்டண உயர்வால் ஒப்பந்த மற்றும் நிரந்திர தூய்மைத்தொழிலாளர்கள் கடும் பாதிப்பு அடைந்துள்ளனர். தூய்மை பாரதம் என்
கிற பெயரில் மத்திய அரசு விளம்பரத்திற்காக கோடிக்கணக்கான ரூபாய் செலவு செய்து வருகிறது. அன்றாடம் தூய்மைப்பணியில் ஈடுபடுகிற இத்தொழிலாளர்களுக்கு இலவச பேருந்துபயண அட்டையைவழங்க வேண்டும். இதற்காகும்செலவை தமிழக உள்ளாட்சித் துறையில் இருந்தோ அல்லது மத்திய அரசின் தூய்மை பாரததிட்டத்தில் இருந்து நிதி ஒதுக்கீடு செய்து போக்குவரத்து கழகத்திற்கு செலுத்த வேண்டும் என இக்கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

Leave A Reply

%d bloggers like this: