நாகப்பட்டினம், ஜன.28-
கருகும் பயிர்களை காப்பாற்ற தண்ணீர் பெற்றுத்தர தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். காவிரி நடுவர் மன்றத் தீர்ப்பின்படி தரவேண்டிய தண்ணீரை கர்நாடக அரசு திறந்துவிட வேண்டும். காவிரி மேலாண்மை வாரியத்தை மத்திய அரசு அமைக்க வேண்டும் என்று வலியுறுத்தியும் இவற்றைச் செயற்படுத் தாத மத்திய பாஜக, மாநில அதிமுக அரசுகளைக் கண்டித்தும் அனைத்து விவசாயிகள் சங்கங்களின் சார்பில் ஜனவரி 28 ஞாயிறன்று நாகப்பட்டி னம், திருச்சி, திருவாரூர், தஞ்சாவூர், கடலூர் உள்ளிட்ட மாவட்டங்களில் ஆவேச ரயில் மறியல் போராட்டம் நடைபெற்றது. இதில் விவசாயிகள் சங்கங்களின் நிர்வாகிகள் மற்றும் அனைத்துக் கட்சிகளின் நிர்வாகிகளும் கலந்து கொண்டனர்.

நாகப்பட்டினத்தில் நடைபெற்ற போராட்டத்திற்கு மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சியின் மாநிலக்குழு உறுப்பினர் வி.மாரிமுத்து, தி.மு.க. மாவட்டக் கழகப் பொறுப்பாளர் என்.கௌதமன், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்டச் செயலாளர் எம்.செல்வராசு ஆகியோர் தலைமை வகித்தனர். இதில் கரும்பு விவசாயிகள் சங்க மாநிலப் பொதுச் செயலாளர் டி.ரவீந்திரன், விவசாயிகள் சங்க மாவட்டச் செயலாளர் வி.சுப்பிரமணியன், திமுக சார்பில் நாடாளுமன்ற முன்னாள் உறுப்பினர் ஏ.கே.எஸ்.விஜயன், கீழ் வேளூர் சட்டமன்ற உறுப்பினர் உ.மதிவாணன், சிபிஐ சார்பில் விவசாயிகள் சங்க மாநிலத் தலைவர் எஸ்.குண சேகரன், மாவட்டச் செயலாளர் எச்.சம்பந்தம், விடுதலைச் சிறுத்தைகள் கட்சி சார்பில் மாவட்டச் செயலாளர் க.பரிமளச் செல்வன், காவிரி விவசாயி கள் பாதுகாப்புச் சங்கம் சார்பில் பொதுச்செயலாளர் காவிரி தனபாலன் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர். அனைத்து விவசாயிகள் சங்கங் களின் சார்பில் ரயில் மறியல் போராட்டத்தில் கலந்துகொண்ட 600-க்கு மேற்பட் டோர் கைது செய்யப்பட்டனர்.

திருவாரூர்:
திருவாரூர் மாவட்டத்தில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செய லாளர் ஆர். முத்தரசன் தலைமையில் கொரடாச்சேரி ரயில் நிலையத்தில் மறியல் போராட்டம் நடைபெற்றது. விவசாயிகள் சங்க மாநில துணைத் தலைவர் கே.முகமதுஅலி, திமுக மாவட்டச் செயலாளர் பூண்டி கலைவாணன், மாவட்டச்செயலாளர் கள் சுந்தரமூர்த்தி (சிபிஎம்), வை.செல்வ ராஜ் (சிபிஐ), பாலச்சந்திரன் (மதிமுக), வடிவழகன் (விசிக), வி.த. செல்வம், திருத்துறைப்பூண்டி எம்எல்ஏ ஆடலரசன், திருவாரூர் நகர காங்கிரஸ் தலைவர் மடப்புரம் சம்பத், விவ சாயிகள் சங்கத் தலைவர்கள் வலிவலம் சேரன், குடவாசல் சேதுராமன் உட்பட 2 ஆயிரம் பேர் போராட்டத்தில் ஈடுபட்டு கைது செய்யப்பட்டனர்.

திருச்சிராப்பள்ளி:
திருச்சி ரயில் நிலையத்தில் மார்க் சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் ஜி.ராமகிருஷ்ணன் தலைமையில் மறியல் போராட்டம் நடைபெற்றது. ஜி.ராமகிருஷ்ணன் தலைமையில் ஜங்சன் ரவுண்டானாவில் இருந்து பேரணியாக வந்த அனைத்து கட்சி யினர் மற்றும் விவசாயிகளை ரயில் நிலையத்திற்குள் செல்லவிடாமல் போலீசார் தடுப்பு மற்றும் கயிறு கட்டி மறித்தனர். போலீசார் ரயில் மறியலுக்கு அனு மதி மறுத்ததால் விவசாயிகள் அரை நிர்வாணத்துடன் தரையில் படுத்து போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் கடுமையான வாக்குவாதம் ஏற்பட்டது. பின்னர் அனுமதி வழங்கப்பட்டது. முதல் பிளாட்பாரத்தில் உள்ள தண்ட வாளத்தில் அமர்ந்து ரயில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

ஜி.ராமகிருஷ்ணன்:
போராட்டத்தின் போது மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் ஜி.ராமகிருஷ்ணன் செய்தி யாளர்களிடம் கூறியதாவது: சம்பா சாகுபடிக்கு தாமதமாகதண்ணீர் திறந்துவிட்ட காரணத்தினால் நடவு இல்லாமல் தெளிப்பு செய்திருந்தனர். இப்பொழுது தண்ணீர் பற்றாக்குறை ஏற்பட்டு மேட்டூர் அணையில் தண்ணீர் இல்லாததால் மேட்டூர் அணையை மூடிவிட்டார்கள். எனவே உடனடியாக 15 டிஎம்சி தண்ணீரை கர்நாடக அரசு திறந்துவிட்டால் தான்கருகும் சம்பா பயிரை பாதுகாக்க முடியும். குறிப்பாக நடுவர் மன்றம் வரலாற்று சிறப்புமிக்க தீர்ப்பு அளித்த பிறகு அந்த தீர்ப்பின் அடிப்படையில் காவிரி மேலாண்மை வாரியம் அமைத்திருந்தால் இந்த பிரச் சனை ஏற்பட்டிருக்காது.

காவிரி மேலாண்மை வாரியம் அமைப்பதற்கு உச்சநீதிமன்றத்திற்கு அதிகாரம் இல்லை என்று மோடி தலைமையிலான மத்திய அரசு உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடுத்து, முட்டுக் கட்டை போட்ட காரணத்தினால் இன்று தமிழகம் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. கர்நாடக அரசை வற்புறுத்தி 15 டிஎம்சி தண்ணீர் பெறவேண்டும். இதில் மத்திய, மாநில அரசுகள் வேடிக்கை பார்க்கக் கூடாது. தமிழகத்திற்கு சேரவேண்டிய 15 டிஎம்சி தண்ணீரை திறந்து விட்டால் உடனடியாக சம்பா பயிரை பாதுகாக்க முடியும். தண்ணீர் திறக்காவிட்டால் அடுத்த கட்டமாக தண்ணீர் திறக்கப்படும் வரை போராட்டம் தொடரும். இவ்வாறு அவர் கூறினார்.

போராட்டத்தில் சிபிஎம் மாநகர் மாவட்டச் செயலாளர் ஆர்.ராஜா, புறநகர் மாவட்டச் செயலாளர் ஜெயசீலன், விவசாயிகள் சங்க மாவட்டச் செயலாளர் சிதம்பரம், மாவட்டச் தலைவர் ராமநாதன், மாநகர் மாவட்டச் செயலாளர் சங்கிலிமுத்து, தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்க மாநில தலைவர் அய்யாகண்ணு, காவிரி டெல்டா பாசனவிவசாயிகள் சங்க புரவலர் பாலுதீட்சதர், தமிழக ஏரி ஆற்றுப் பாசன விவசாயிகள் சங்க மாநிலதலைவர் விசுவநாதன், மதிமுக விவசாயிகள் அணி மாநில துணைசெயலாளர் துரைராஜ், மாநகர் மாவட்டச் செயலாளர் வெல்லமண்டி சோமு, புறநகர் மாவட்டச் செயலாளர் சேரன், திமுக சேசு அடைக்கலம், காங்கிரஸ் தங்கராசு, சாத்தனூர் துரைசாமி, விடுதலை சிறுத்தைகள் மண்டல செயலாளர் சிட்டு மற்றும் 30 பெண்கள் உள்பட 500 பேர் கைதாகினர்.

திருவெறும்பூர் ரயில் நிலையத்தில் நடைபெற்ற ரயில் மறியல் போராட்டத்திற்கு தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாநகர் மாவட்ட தலைவர் கே.சி.பாண்டியன், வேங்கூர் சுப்ரமணி ஆகியோர் தலைமை வகித்தனர்.விவசாயிகள் சங்க மாநில பொருளாளர் கே.பி.பெருமாள், சிபிஎம் திருவெறும்பூர் தாலுகா செயலாளர் நடராஜன், புறநகர் மாவட்ட செயற்குழு உறுப்பினர் மல்லிகா, சிபிஐ திருவெறும்பூர் ஒன்றிய செயலாளர் செல்வராஜ் மற்றும் 6 பெண்கள் உள்பட 50 பேரை போலீசார் கைது செய்தனர்.

மயிலாடுதுறை :
நாகை மாவட்டம் ,மயிலாடுதுறையில் நடைபெற்ற ரயில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட சிபிஎம் மாவட்டச் செயலாளர் நாகை மாலி மற்றும் திமுக, சிபிஐ,மதிமுக,விசிக கட்சிகளின் மாவட்ட செயலாளர்கள், நிர்வாகிகள் உள்ளிட்ட 500-க்கும் மேற்பட்டோரை காவல்துறையினர் கைது செய்தனர்.

கும்பகோணம் :
கும்பகோணம் ரயில்நிலையத்தில் நடைபெற்ற மறியல் போராட்டத்திற்கு சிபிஎம் மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் சின்னை. பாண்டியன், சி.ஜெயபால், விவசாயிகள் சங்க மாவட்ட துணைச்செயலாளர் கணேசன்,வி.சி.க. மாவட்டச் செயலாளர் தமிழருவி, பசுமை பாதுகாப்பு இயக்க பொறுப்பாளர் பசுமைவளவன், சிபிஐ மாநிலக்குழு உறுப்பினர் மு.அ.பாரதி,திமுக மாவட்டச் செயலாளர் சு.கல்யாணசுந்தரம் ,திருவிடைமருதூர் சட்டமன்ற உறுப்பினர் கோவி.செழியன், குடந்தை சட்டமன்ற உறுப்பினர் க.அன்பழகன் உட்பட ஏராளமானோர் பங்கேற்றனர்.

தஞ்சாவூர்:
தஞ்சாவூரில் நடைபெற்ற ரயில் மறியல் போராட்டத்திற்கு மதிமுக பொதுச்செயலாளர் வைகோ தலைமை வகித்தார். விவசாயிகள் சங்கங்களின் பொதுச்செயலாளர்கள் பெ.சண்முகம், வே.துரைமாணிக்கம், திமுக சார்பில் முன்னாள் மத்திய அமைச்சர் எஸ்.எஸ்.பழனிமாணிக்கம், துரை.சந்திரசேகரன், நீலமேகம், சிபிஎம் மாவட்டச் செயலாளர் கோ.நீலமேகம், சிபிஐ மாவட்டச் செயலாளர் இரா.திருஞானம்,வி.சி.க. மாவட்டச் செயலாளர் சொக்கா.ரவி, காங்கிரஸ் கட்சி மாநகரச்செயலாளர் ராஜேந்திரன், தி.க.சார்பில் அமர்சிங், விவசாயிகள் சங்க மாவட்டத் தலைவர் கண்ணன், மாவட்டச் செயலாளர் சாமி.நடராஜன் உட்பட நூற்றுக்கணக்கானோர் பங்கேற்றனர்.

Leave a Reply

You must be logged in to post a comment.