கரூர்,ஜன.28-
இந்திய கட்டுமான உழைக்கும் பெண்கள் அமைப்பின் 5 ஆவது மாநில மாநாடு கரூர் நாரதகான சபாவில் நடைபெற்றது. மாநாட்டிற்கு சங்கத்தின் மாநில துணைத் தலைவர்கள் ஆர்.ராதா, ஜே. ரூபி ஆகியோர் தலைமை வகித்தனர். மாநாட்டு வரவேற்புக்குழு தலைவர் ஜி.ஜீவானந்தம் வரவேற்றுப் பேசினார். கட்டுமான தொழிலாளர் சம்மேளனத்தின் அகில இந்திய தலைவர் ஆர்.சிங்காரவேலு துவக்கி வைத்து பேசினார்.

மாநில துணைத் தலைவர் மாலதி சிட்டிபாபு வேலையறிக்கையை சமர்ப்பித்தார். உழைக்கும் பெண்கள் அமைப்பின் மாநில அமைப்பாளர் எம்.மகாலட்சுமி, சிஐடியு கரூர் மாவட்டச் செயலாளர் சி.முருகேசன் ஆகியோர் வாழ்த்திப் பேசினர். கட்டுமான சம்மேளனத்தின் மாநில பொதுச்செயலாளர் டி.குமார் நிறைவுரையாற்றினார். மாநாட்டு வரவேற்புக்குழு செயலாளர் சி.ஆர்.ராஜாமுகமது நன்றி கூறினார்.

நிர்வாகிகள்:
இந்திய கட்டுமான உழைக்கும் பெண்கள் அமைப்புக்குழுவின் மாநில அமைப்பாளராக ஜே. ரூபி, துணை அமைப்பாளர்களாக ராதா, இளவரசி, தமிழீஸ்வரி ஆகியோர் தேர்வு செய்யப்பட்டனர்.  கட்டுமானத் தொழிலாளர்களுக்கு ஆண்டு முழுவதும் வேலை வழங்க வேண்டும். வேலையில்லாக் காலத்திற்கு நிவாரணம் வழங்க வேண்டும். 55 வயதில் பென்சன் வழங்க வேண்டும். பென்சன் தொகை ரூ.3 ஆயிரமாக உயர்த்தி வழங்க வேண்டும். சம வேலைக்கு சம ஊதியம், குறைந்தபட்ச மாத ஊதியம் ரூ.18 ஆயிரம் என உத்தரவாதம் செய்ய வேண்டும். இலவச வீட்டுமனைபட்டா வழங்க வேண்டும். நலவாரிய பணப்பயன்களை கணிசமாக உயர்த்த வேண்டும். பிரசவ உதவி நிதி ஒரே தவணையாக ரூ.18 ஆயிரம் வழங்க வேண்டும். பணியிடங்களில் குழந்தைகள் காப்பகம் வேண்டும், பாலியல் துன்புறுத்தல்கள் குறித்து புகார் செய்ய, புகார்களை விசாரிக்க புகார் கமிட்டிகள் அமைக்கப்பட வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் மாநாட்டில் நிறைவேற்றப்பட்டன.

Leave A Reply

%d bloggers like this: