திருவனந்தபுரம், ஜன.28-
கேரளத்தை நடுங்க வைத்த ஒக்கி புயலில் சிக்கிதகர்ந்துபோன 120 பைபர் வள்ளங்களுக்கு பதில் புதிய வள்ளங்கள் வாங்க ரூ.9.88 கோடி நிவாரணமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

ஒக்கி துயரில் பாதிக்கப்பட்டுள்ளோருக்கு அரசு மேற்கொண்டுவரும் நிவாரண நடவடிக்கையின் ஒரு பகுதியாக இந்த தொகை வழங்கப்பட உள்ளது. திருவனந்தபுரம் மாவட்டத்தில் ஒக்கியில் உயிரிழந்த 25 பேருக்கு தலா ரூ.22 லட்சம் வீதம் ஏற்கனவே வழங்கப்பட்டுள்ளது. உயிரிழந்த மற்ற மாநில மீன் தொழிலாளர்கள், காணாமல்போன தொழிலாளர் களின் குடும்பங்களுக்கும் இந்நிவாரணம் வழங்கப்பட வேண்டும் என்பதே அரசின் நிலைஎன மீன்வளத்துறை அமைச்சர் ஜே.மெர்சிக்குட்டியம்மா தெரிவித்தார். பைபர் வள்ளங்கள், மோட்டார், வலை போன்றவற்றுடன், உயிர்காக்க உதவும் கருவிகளும் உள்ளடக்கிய தொகுப்பு
வள்ளம் நாசமாக தொழிலாளர்களுக்கு வழங்க அரசு முடிவுசெய்துள்ளது. வள்ளத்தை இழந்து, கடலில் மீன்பிடிக்கச்செல்ல முடியாமல் அவதிப்படும் மீன் தொழிலாளர்களைகண்டறிந்து அதனடிப்படையில் இந்நிவாரணம் வழங்கப்படுகிறது என அமைச்சர் தெரிவித்தார்.

Leave A Reply

%d bloggers like this: