வால்பாறை, ஜன.28 –
வால்பாறை பகுதியில் உள்ள மக்களுக்கு அடிப்படை வசதிகளை நிறைவேற்ற வலியுறுத்தி சிபிஎம் சார்பில் பிரச்சார இயக்கம் நடைபெற்றது.

வால்பாறை மலைப்பகுதியில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் நடைபெற்ற வாகன பிரச்சார இயக்கத்திற்கு சிஐடியு தேயிலைத் தோட்டத் தொழிலாளர்கள் மற்றும் அலுவலர்கள் சங்கத்தின் கோவை மாவட்ட பொதுச்செயலாளர் பி.பரமசிவம் தலைமை வகித்தார். இதில், மார்க்சிஸ்ட் கட்சியின் ஆனைமலை ஒன்றிய செயலாளர் வி.எஸ்.பரமசிவம், விவசாயத் தொழிலாளர்கள் சங்கத்தின் ஆனைமலை ஒன்றிய தலைவர் வி.எஸ்.பாலசுப்ரமணியம், சிபிஎம் ஒன்றியக்குழு உறுப்பினர் எஸ்.குஞ்சாள் உள்ளிட்டோர் உரையாற்றினர். இந்த வாகன பிரச்சார இயக்கத்தில் தோட்ட தொழிலாளர்களுக்கு தினக்கூலியாக ரூபாய் 366 வழங்கிட வலியுறுத்தியும், வால்பாறையில் டிஎன்பிஎஸ்சி தேர்வு மையம் அமைக்க வேண்டும். அரசு மருத்துவமனை யில் அறுவை சிகிச்சை மையம் அமைக்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கையை வலியுறுத்தி இந்த பிரச்சார பயணம் நடைபெற்றது.

முன்னதாக, வால்பாறை தியாகிகள் தினம் அனுசரிக்கப்பட்டது. இதில் மார்க்சிஸ்ட் கட்சி, சிஐடியு மற்றும் வால்பாறை தோட்ட தொழிலாளர் சங்க நிர்வாகிகள் ஏராளமானோர் பங்கேற்றனர்.

Leave a Reply

You must be logged in to post a comment.