திருப்பூர், ஜன. 28-
இந்திய கிளாசிக்கல் அக்குபஞ்சர் சங்க முதல் தேசிய மாநாடு திருப்பூர் காங்கயம் சாலையில் உள்ள காயத்திரி மஹாலில் சனிக்கிழமை நடைபெற்றது. இந்த மாநாட்டிற்கு மாநில செயலாளர் முகமது நிசார்தலைமை வகித்தார். இதில் இந்தியாவில் உள்ள பல மாநிலத்திலிருந்து பிரதிநிதிகள் கலந்து கொண்டனர். இந்த, மாநாட்டில் அக்குபஞ்சருக்கு தனி கவுன்சில் அமைக்க வேண்டும், அனைத்து அரசு மருத்துவமனைகளிலும் அக்குபஞ்சருக்கான தனி மருத்துவ பிரிவு அமைக்க வேண்டும், அனைத்து இடங்களிலும் சுக பிரசவத்தை ஊக்குவிக்க வேண்டும் போன்ற பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

Leave A Reply

%d bloggers like this: