சென்னை,

தமிழ்த்தாய் வாழ்த்து இசைத்தபோது எழுந்து நிற்காத காஞ்சி சங்கராச்சாரியாருக்கு  நாகரீகம் தெரியவில்லை என்று நடிகர் விஜய் சேதுபதி சாடியுள்ளார்.

கடந்த 23-ஆம் தேதி பாஜக தேசியச் செயலாளர் எச்.ராஜாவின் தந்தை எழுதிய சமஸ்கிருத தமிழ் அகராதி நூல் வெளியீட்டு விழா நிகழ்ச்சி நடந்தது.இந்த நிகழ்ச்சியில் காஞ்சி சங்கர மடம் விஜயேந்திரர் கலந்து கொண்டார். ஆளுநர் பன்வாரி லால் புரோகித்தும் நூல் வெளியிளீட்டு விழாவில் பங்கேற்றார். அப்போது நிகழ்ச்சி ஆரம்பத்தில் தாய்த்தமிழ் வாழ்த்து இசைக்கப்பட்டது. அப்போது விஜயேந்திரர் எழுந்து நிற்காமல் அமர்ந்திருந்தார். ஆனால் தேசிய கீதத்தின் போது எழுந்து நின்று மரியாதை செலுத்தினார்.

இந்த விவகாரம் தமிழகம் முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. பல தரப்பினர் கண்டனம் தெரிவித்துள்ளனர். விஜயேந்திரர் தமிழ்த்தாய் வாழ்த்தை அவமதித்துவிட்டார் என தமிழ் ஆர்வலர்கள், அரசியல் கட்சியினர், உட்பட பலரும் கண்டனம் தெரிவித்துள்ளனர்
இந்நிலையில் இதுகுறித்து நடிகர் விஜய் சேதுபதியும் தற்போது பேசியுள்ளார். திருவெறும்பூரில் நடைபெற்ற திருச்சி படைக்கலன் தொழிற்சாலை பொன்விழா ஆண்டுவிழாவில் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்ட விஜய் சேதுபதி பல்வேறு விஷயங்களை பற்றி பேசினார்.

அதில் மத்திய அரசின் பாராமுகம் குறித்தும் பேசினார். மேலும் தமிழ்த்தாய் சர்ச்சை குறித்துப் பேசிய அவர் தமிழ்த்தாய் வாழ்த்து ஒலித்தபோது, எழுந்து நின்று மரியாதை செய்யாத விஜயேந்திரருக்கு நாகரிகம் தெரியவில்லை என்று சாடி உள்ளார்

Leave a Reply

You must be logged in to post a comment.