மதுரை;
‘கீழடியைப் பாதுகாப்போம், இந்தித் திணிப்பை என்றும் எதிர்ப்போம்’ ‘சாதியற்ற தமிழர், காவியற்ற தமிழகம்’ என்ற முழக்கத்தோடு தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர்-கலைஞர்கள் சங்கம், இந்திய மாணவர் சங்கம், இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம், இந்திய தொழிற்சங்க மையம் ஆகியவை இணைந்து தமிழர் உரிமைப் பாதுகாப்பு மாநாட்டை மதுரையில் சனிக்கிழமை நடத்தின.மதுரை பழங்காநத்தத்தில் நடைபெற்ற நிகழ்வில், சிவகங்கை மாவட்டத்திலிருந்து கொண்டு வரப்பட்ட கணியன் பூங்குன்றன் நினைவுச் சுடரை தமுஎகச மாநிலத்துணைத் தலைவர் என்.நன்மாறன் பெற்றுக்கொண்டார்.

மதுரை புறநகரிலிருந்து ‘பரிதிமாற் கலைஞர் நினைவாகக் கொண்டுவரப்பட்ட நினைவுச் சுடரை’ கவிஞர் சமயவேல் பெற்றுக்கொண்டார்.

இராமநாதபுரம் மாவட்டம் ‘அழகன்குளத்திலிருந்து கொண்டுவரப்பட்ட பிடிமண்ணை’ இந்திய மாணவர் சங்கத்தின் மத்தியக் குழு உறுப்பினர் ஏ.டி.கண்ணன் பெற்றுக்கொண்டார்.
கம்பம் கூடலூரிலிருந்து ‘மொழிப்போர் தியாகிகள் நினைவாக கொண்டுவரப்பட்ட நினைவுச் சுடரை’ இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தின் மாநிலத் தலைவர் செந்தில் பெற்றுக்கொண்டார்.
திண்டுக்கல்லிலிருந்து ‘பாடியூர், ஆயக்குடியிலிருந்து கொண்டுவரப்பட்ட பிடிமண்ணை’ இந்திய தொழிற்சங்கமையத்தின் மதுரை மாநகர் மாவட்டச் செயலாளர் இரா.தெய்வராஜ் பெற்றுக்
கொண்டார்.மதுரை நகரிலிருந்து கொண்டு வரப்பட்ட ‘கீழடி பிடிமண்ணை’ இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தின் மத்தியக்குழுஉறுப்பினர் ஜென்னி பெற்றுக் கொண்டார்.

தொடர்ந்து தமுஎகச மாநில துணைத் தலைவர் மதுக்கூர் ராமலிங்கம் தலைமையில் மாநாடு நடைபெற்றது. தமுஎகச மதுரை மாநகர் மாவட்டச் செயலாளர் அ.ந.சாந்தாராம் வரவேற்றார்.
விடுதலைப் போராட்ட வீரர் என்.சங்கரய்யா, இந்திய தொழிற் சங்க மையத்தின் மாநிலத் தலைவர் அ.சவுந்தரராசன், தன்னாட்சி தமிழகத்தின் ஒருங்கிணைப்பாளர் ஆழி.செந்தில்நாதன், தமுஎகச பொதுச் செயலாளர் சு.வெங்கடேசன், வாலிபர் சங்க செயலாளர் எஸ்.பாலா, மாணவர் சங்க செயலாளர் உச்சிமாகாளி ஆகியோர் கருத்துரையாற்றினர். ஓவியர் வெண்புறா நிகழ்ச்சியை தொகுத்து வழங்கினார். மதுரை மாவட்டத் தலைவர் ஸ்ரீரசா நன்றி கூறினார்.

கண்காட்சி
முன்னதாக ‘இந்தித் திணிப்பு எதிர்ப்புப்போராட்டம் ஒரு வரலாறு’ என்ற காண்காட்சி
யை ஓவியரும், செம்மலர் மூத்த துணையாசிரியருமான தி.வரதராஜன் திறந்து வைத்தார்.
கீழடியின் தொன்மைகளை விளக்கும் கீழடி அரிய வரலாற்று, சமயச் சார்பற்ற தொல் தமிழின் மேன்மை மிகு நகர நாகரீகத்தை விளக்கும் கண்காட்சியை ஆழி செந்தில்நாதன் திறந்து வைத்தார்.இந்தக் கண்காட்சிகளுக்கான தயாரிப்புப் பணிகளில் ஸ்ரீரசா, மயிலை பாலு, ந.வே. அருள், ராஜேந்திரகுமார் ஆகியோர் ஈடுபட்டிருந்தனர்.

கரிசல்குயில் கருணாநிதி கலைநிகழ்ச்சி, சுடர் கலைக்குழு தப்பாட்டம், வன்னிவேலம்பட்டி கலைக்குழுவின் ஒயிலாட்டம், மதுரை டிஒய்எப்ஐ ஸ்போர்ட் கிளப்பின் சிலம்பாட்டம் ஆகியவை நடைபெற்றது.

Leave A Reply

%d bloggers like this: