புதுதில்லி;
தொழில்நுட்பக் கல்விக்கான அனைத்திந்திய இந்திய கவுன்சிலானது, பொறியியல் மாணவர்கள், அவர்களின் துறை சார்ந்த பாடங்களை மட்டுமல்லாமல் வேதங்கள், புராணங்கள் மற்றும் தர்கா சாஸ்திரம் போன்றவற்றையும் படிக்கும் வகையில் மாதிரி பாடத்திட்டம் ஒன்றைப் பரிந்துரை செய்துள்ளது.இதுதொடர்பாக ஹிந்துஸ்தான் டைம்ஸ் நாளிதழ் செய்தி ஒன்றை வெளியிடுள்ளது.
“வேத, புராணங்களை உள்ளடக்கிய இந்த மாதிரியான பாடத்திட்டங்கள், நிறுவனங்கள் தங்கள் சொந்த பாடத்திட்டத்தைத் திருத்தி அமைக்கும்போது, ஒரு வழிகாட்டியாக இருக்கும் என்றும், மாதிரி பாடத்திட்டத்தின் அடிப்படையில் ஒவ்வொரு நிறுவனமும் தங்களின் பாடத்திட்டத்தை மாற்றி அமைக்க வேண்டும், அதுவே மாணவர்களின் உரிமை” என மனித வள மேம்பாட்டுத்துறை அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் கூறியிருப்பதாகவும் அந்த செய்தியில் குறிப்பிடப்பட்டு உள்ளது.

“பாடத்திட்டத்தை வருடந்தோறும் புதுப்பிக்க வேண்டும் மற்றும் தொழில்துறைகளின் தேவைக்கேற்ப மாற்றி அமைக்க வேண்டும்” எனவும் அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் கூறியுள்ளார்.“யோகா மற்றும் இந்தியாவின் நவீன விஞ்ஞானத்தை அல்லாமல், இந்தியப் பாரம்பர்யத்தின் சாராம்சம் மாணவர்களுக்கு இந்திய தத்துவத்தையும், மொழியியலையும் கற்பிக்கும். புதிய பாடத்திட்டம் நடைமுறை அறிவு மற்றும் ஆய்வக வேலைகளில் அதிக முக்கியத்துவம் தருகிறது. முதற்கட்ட பயிற்சிகளும் கட்டாயம் ஆக்கப்பட்டுள்ளது. இது பொறியியல் மாணவர்கள் தொழில் மற்றும் சமுதாயத்தின் தேவைகளை இணைப்பதற்கு உதவும்” என மனிதவள அமைச்சகம் தெரிவித்துள்ளது.

Leave A Reply

%d bloggers like this: