===சி.ஸ்ரீராமுலு====                                                                                                                                                               “பனிச் சறுக்கு விளையாட்டிலும் இந்தியர்கள் சாதிக்க முடியும் என்பதை நிரூபித்து புதிய வரலாறு படைத்தார் ஆன்சல் தாகூர். 21 வயதாகும் ஆஞ்சல் மற்றவர்களைப்போன்று தானும் விளையாட்டாக பனிச் சறுக்கில் உருண்டார். அதையே பிறகு, தொழில்முறை விளையாட்டாக மாற்றி சாதித்துக் காட்டினார்”.குளிர் பிரதேசமான இமாச்சலில் 1996 ஆம் ஆண்டில் பிறந்தவர் ஆன்சல் தாகூர். சிர்மாரை மாவட்டத்தின் சின்னஞ்சிறு கிராமமான புருவாதான் அவரது சொந்த ஊர். அம் மாநிலத்தில் பனிப் பொழிவும் பனிபடர்ந்த சிகரங்களையும் உள்ளடக்கிய குலு மாவட்டத்தின் மணாலி நகரில் உறைந்து கிடக்கும் பணியில் இயற்கையாக உருண்டு புரளும் வாய்ப்பு கிடைத்தது.

பியாஸ் நதிக்கரையின் பள்ளத்தாக்கில் 6,398 அடி உயரத்திலுள்ள மணாலியில் பனிச்சறுக்கு விளையாட்டை முறையாக கற்றுக் கொள்ள தந்தையின் உதவியுடன் பயிற்சியில் சேர்ந்தார். அதற்கான உபகரணங்கள் விலை உயர்ந்தவை என்றாலும் 5 முதல் 10 லட்சம் ரூபாய் வரைக்கும் செலவு செய்தார். இதனால், பள்ளிப் பருவத்தி லேயே விளையாட்டுப்போட்டிகளில் கலந்துகொண்டு பரிசுகளை குவித்தார். வெற்றிமேல் வெற்றி கிடைக்கவே தொடர்ச்சியாக பயிற்சியில் கவனம் செலுத்தினார்.வெகு விரைவில் தேசிய அளவிலான போட்டிக்கு தேர்வு செய்யப் பட்டார். முதன் முறையாக பங்கேற்றபோது பதக்கம் கிடைக்க வில்லை என்றாலும் ஆட்டத்திறனில் முன்னேற்றத்தை கண்டார். ஆஞ்சலின் திறமையை பார்த்த ஒலிம்பிக்கில் பதக்கம் வென்ற ஹிராலால் மணாலி பகுதியிலேயே பயிற்சிகொடுக்க முன்வந்தார். இது ஆஞ்சாலுக்கு கூடுதல் உற்சாகத்தை கொடுத்தது. மணாலி மலையின் கடும் குளிரிலும் பயிற்சிகளை மேற்கொண்டனர்.
பனிச்சறுக்கு விளையாட்டுகளுக்கு நமது நாட்டில் போதுமான உள்கட்டமைப்பு வசதிகள் இல்லாத நிலையிலும் ஆன்சல் தாகூரின் கடின உழைப்புக்கு 21 வயதில் உரிய அங்கீகாரம் கிடைத்துள்ளது.

சமீபத்தில் துருக்கி நாட்டில் நடந்த சர்வதேச பனிச்சறுக்கு போட்டியில் ஆல்பைன் பனிச்சறுக்கு பிரிவில் இந்தியாவின் சார்பில் பங்கேற்ற ஒரே வீராங்கனை இவரே. பனிச் சறுக்கு விளையாட்டில் பாரம்பரிய மிக்க சுவிட்சர்லாந்து, நார்வே, கனடா, ரஷ்யா, ஆஸ்திரியா, ஜெர்மனி ஸ்விடன் போன்ற நாடுகளை சேர்ந்த வீரர்களுடன் களம் இறங்கிய முதல் தொடரிலேயே மூன்றாவது இடத்தை பிடித்து வெண்கலப் பதக்கம் வென்று சாதனை படைத்தார். இதன் மூலம், பனிச் சறுக்கு விளையாட்டில் பதக்கம் வென்ற முதல் இந்திய வீராங்கனை என்ற பெருமையை பெற்றார். சர்வதேச அளவில் பதக்கம் வென்று நாட்டின் பெருமையை நிலை நாட்டிய ஆன்சலுக்கு பிரதமரும், மத்திய விளையாட்டு துறை அமைச்சரும் பாராட்டும் வாழ்த்தும் தெரிவித்தனர்.பனி பிரதேசங்களை அடிப்படையாக் கொண்டு ஆல்பைன் பனிச் சறுக்கு, சாவல் ரேசிங், ஹைகிங், மலையேற்றம், ஸ்னோ ஹாக்கி, ஸ்னோ ஸ்கீயிங் , பாராகிளைடிங், என ஏராளமான விளையாட் டுகள் விளையாடப்படுகின்றன. இந்த விளையாட்டுகளில் எத்தனை விளையாட்டுகளை நாம் ரசிக்கிறோம் என்றால் அது கேள்விக் குறிதான்?

இந்த நிலைமையிலும் ஆன்சல் தாகூர் சாதித்திருப்பது குறித்து அவரது தந்தை ரோஷான் தாகூர் கருத்து தெரிவிக்கையில்,“ பனிச் சறுக்கு விளையாட்டில் பதக்கம் வென்று இந்தியாவுக்கு ஒரு திருப்புமுனை யாகும். மகளின் வெற்றி பனிச்சறுக்கில் பெரும் சகாப்தம்” என்று கூறியிருப்பது உள்ளபடியே வரவேற்க தக்கதாகும்.நாட்டில் கிரிக்கெட்டை கொண்டாடுவதுபோன்று மற்ற விளை யாட்டுகளை தூக்கி பிடிப்பதில்லை. அதிலும் ஒரு சில விளையா ட்டுக்கள் கண்டுக்கொள்ளப்படுவதே கிடையாது. அதில் முதலிடத் தில் இருப்பது பனிபிரதேசங்களில் விளையாடும் குளிர்கால விளையாட்டாகும். யாருமே கண்டுக்கொள்ளவில்லை என்பதற்காக நாமும் அதை விட்டுவிடக்கூடாது. மற்றவர்களை திரும்பப் பார்க்க வைத்த ஆன்சல், தென் கொரியாவின் பியாங்சாங் நகரில்அடுத்த மாதம் 9 ஆம் தேதி முதல் 25 ஆம் தேதி நடக்கும் குளிர்கால ஒலிம்பிக்கில் பதக்கம் வென்று பதக்கப்பட்டி யலில் இந்தியாவையும் அலங்கரிக்க சாதனை படைக்க வாழ்த்துவோம்!

Leave a Reply

You must be logged in to post a comment.