சென்னை;
55 வது தேசிய ரோலர் விளையாட்டு சாம்பியன் ஷிப் போட்டிகள் சென்னையில் இன்று துவங்கியது.சென்னை ஜவஹர்லால் நேரு விளையாட்டு அரங்கில் ஜன. 31 ஆம் தேதி வரை 5 நாட்கள் இப்போட்டி நடைபெறவுள்ளது. இந்தப்போட்டியில் இந்தியா முழுவதிலும் இருந்து வீரர்களும் வீராங்கனைகளும் கலந்து கொள்ளவுள்ளனர். தமிழ்நாடு ரோலர் ஸ்கேட்டிங் அசோசியேஷன் இந்த சாம்பியன்ஷிப் போட்டியை நடத்துகிறது. இந்தப்போட்டியில் தமிழ்நாடு உள்பட இந்தியா முழுவதிலுமிருந்து 24 மாநிலங்களில் இருந்து 8வயது முதல் 12 வயது, 12 முதல் 16 வயது மற்றும் 16 வயதுக்கு மேல் என பல்வேறு பிரிவுகளில் 900 ஆடவர், சிறுவர் கலந்து கொள்கின்றனர்.

ரோலர் ஸ்கேட்டர்ஸ் ஸ்பீடு ஸ்கேட்டிங், ஆர்ட்டிஸ்டிக் ஸ்கேட்டிங், ஃபிரி ஸ்டைல் ஸ்கேட்டிங் என மூன்று பிரிவுகளில் போட்டிகள் நடைபெறும் என்று இந்திய ரோலர் ஸ்கேட்டிங் சம்மேளனத் தலைவர் துல்சி ராம் அகர்வால், சம்மேளனப் பொருளாளர் பிரேம் செபஸ்டியன், பொதுச் செயலாளர் நரேஷ் குமார் சர்மா ஆகியோர் தெரிவித்துள்ளனர்.தேசிய ஸ்கேட்டிங் சாம்பியன் போட்டி நடைபெறவுள்ளதை முன்னிட்டு ஆர்டிஸ்டிக் ஸ்கேட்டிங் குறித்த கருத்தரங்கம், இந்திய பயிற்சியாளர்கள், நடுவர்கள், முன்னாள் ஸ்கேட்டிங் வீரர்கள் மற்றும் வீராங்கனைகளுக்கும் பயிற்சிமுகாம் ஆகியவை ஜனவர் 29 ஆம் தேதி வரை நடைபெறும். சர்வதேச ரோலர் ஸ்கேட்டிங் விளையாட்டு (வோர்ல்டு ஸ்கேட்ஸ்) ஆர்டிஸ்டிக் தொழில்நுட்ப குழுவின் தலைவர் நிகோலா கெஞ்சி தொழில்நுட்ப ரீதியில் இந்த கருத்தரங்கையும் பயிற்சி முகாமையும் நடத்தவுள்ளார்.

Leave a Reply

You must be logged in to post a comment.