பெங்களூரு;
கர்நாடகத்தில் இந்த முறையும் பாஜக ஆட்சிக்கு வர முடியாது, அக்கட்சி படுதோல்வி அடையும் என்று லோக்நிதி – சிஎஸ்டிஎஸ் நிறுவனத்தின் கருத்துக் கணிப்பு தெரிவிக்கிறது.கர்நாடக காங்கிரஸ் அரசின் செயல்பாடு உள்ளிட்ட நான்கு முக்கிய அம்சங்களின் அடிப்படையில் இந்த கருத்துக் கணிப்பு நடத்தப்பட்டு முடிவு அறிவிக்கப்பட்டுள்ளது.
அதனடிப்படையில், காங்கிரஸ் கட்சிக்கு 49 சதவிகிதம் பேரின் ஆதரவு கிடைத்துள்ளது. பாஜக-வுக்கு வெறும் 27 சதவிகிதம் பேரின் ஆதரவும், மதச்சார்பற்ற ஜனதாதளத்திற்கு 20 சதவிகிதம் பேரின் ஆதரவும் இருப்பதாக அந்த கணிப்பு கூறுகிறது.

பெங்களூரு நகரில் காங்கிரஸ் அரசுக்கு ஆதரவு மோசமாக உள்ளது. 55 சதவீதம் பேர் காங்கிரஸ் அரசு மீது அதிருப்தி வெளியிட்டுள்ளனர். 11 சதவீதம் பேர் மட்டுமே ஆதரவு தெரிவித்துள்ளனர்.
அதேசமயம், காங்கிரஸ் அரசுக்கு சிறிய நகரங்களில் நல்ல ஆதரவு காணப்படுவதாகவும், குறிப்பாக மிகவும் பிற்படுத்தப்பட்டோர், தாழ்த்தப்பட்டோர், தாழ்த்தப்பட்ட பழங்குடியினர் ஆகிய சமூகத்தவரிடையே காங்கிரஸுக்கு நல்ல ஆதரவு இருப்பதாகவும் தென் கர்நாடகா, மும்பை கர்நாடகா மற்றும் ஹைதராபாத் கர்நாடகா ஆகிய 3 பிராந்தியங்களில் காங்கிரசே முன்னிலையில் இருப்பதாகவும் லோக்நிதி கருத்துக் கணிப்பில் குறிப்பிடப்பட்டு உள்ளது.

Leave A Reply

%d bloggers like this: