மாட்ரிட்;
உலகின் அனைத்துத் துறைகளிலும் மனிதர்களை விட வேகமாகவும், அதி விரைவாகவும் வேலையைச் செய்து முடிக்க ரோபோக்கள் பயன்படுத்தப்பட்டு வரும் இந்த வேளையில், மனிதர்கள் செய்யும் ஊழலைக் கண்டுபிடிக்கவும் பயன்படுத்தப்பட உள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன.ஸ்பெயினின் வல்லா போலித் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த விஞ்ஞானிகள், செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம் மூலம் இந்த ரோபோவை உருவாக்கியுள்ளனர்.
நாம் சந்தேகப்படும் தொழில் அல்லது திட்டம் குறித்து இந்த ரோபோவிடம் தகவல் கொடுத்தால், அதில் ஊழல் நடந்து இருக்கிறதா? இல்லையா? என்பதை இந்த ரோபோக்கள் கண்டறிந்து விடுமாம்.

இந்த ரோபோவில் இதுவரை நடந்த பல்வேறு ஊழல்கள் குறித்த தகவல்கள் சேமிக்கப்பட்டுள்ளதால், அதையும், நாம் கொடுக்கும் தகவலையும் சரிபார்த்து ஊழலை ரோபோக்கள் கண்டுபிடித்து விடுமாம். அதே போன்று குறிப்பிட்ட அரசியல் தலைவர்களின் வாழ்க்கை வரலாறு, அந்தக் கட்சியின் செயல்பாடு, அந்த ஊழல் குறித்து அவர் கூறியது என அனைத்தையும் அந்த ரோபோ சரிபார்த்து விடுமாம்.தற்போது இந்த ரோபோவில் ஸ்பெயினில் 2000ஆம் ஆண்டில் இருந்து நடந்த ஊழல் குறித்த தகவல்கள் மெமரியில் ஏற்றப்பட்டுள்ளன. இவ்வகை ரோபோக்கள் இந்தியாவிலும் அறிமுகம் செய்யப்பட்டால், ஊழலைக் கண்டுபிடிப்பதில் சிரமம் இருக்காது என்று கூறப்படுகிறது. ஆனால், மெமரியில் வைக்க முடியாத அளவிற்கு இந்தியாவில் நடக்கும் ஊழல்களை கண்டுபிடிப்பதில் ரோபோக்களுக்கு வேண்டுமானால் சிரமம் ஏற்படலாம்.

Leave A Reply

%d bloggers like this: