கோவை, ஜன.25-
போராடிப் பெற்ற உரிமைகளை மத்திய பாஜக அரசு பறிப்பதை ஒருபோதும் அனுமதிக்கமாட்டோம் என முழக்கமிட்டு வியாழனன்று ஆவேச மறியல் போராட்டத்தில் ஈடுபட்டஅனைத்து மத்திய தொழிற்சங்கங்கத்தினர் கைது செய்யப்பட்டனர்.

விலைவாசி உயர்வை கட்டுப்படுத்து, குறைந்தபட்ச ஊதியம் ரூ.18 ஆயிரம் என சட்டமியற்று, நலவாரிய பணப்பயன்களை உடனே வழங்குக. சமவேலைக்கு சம ஊதியம் வழங்கு, சாலை பாதுகாப்பு மசோதவை திரும்பப்பெறு என்பன உள்ளிட்ட 12 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி மாநிலம் தழுவிய மறியல் போராட்டத்திற்கு அனைத்து மத்திய தொழிற்சங்கங்கள் அறைகூவல் விடுத்தன. இதன் ஒருபகுதியாக கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு சிஐடியு மாவட்ட தலைவர் சி.பத்மநாபன் தலைமையில் அனைத்து மத்திய தொழிற்சங்கங்கள் சார்பில் மறியல் போராட்டம் நடைபெற்றது. இப்போராட்டத்தில் சிஐடியு மாநில துணைத் தலைவர் எஸ்.ஆறுமுகம், ஏஐடியுசி தலைவர் எம். ஆறுமுகம், ஐஎன்டியுசி சீனிவாசன், எச்எம்எஸ் இராஜமணி, ஏஐசிசிடியு தாமோதரன், எல்பிஎப் தியாகராஜன் உள்ளிட்ட 500க்கும் மேற்பட்டோர் பங்கேற்று கைதாகினர்.

இதேபோல், கோவை பெரியநாயக்கன்பாளையம் மற்றும் வால்பாறை ஆகிய இடங்களில் நடைபெற்ற போராட்டங்களில் நூற்றுக்கணக்கானோர் பங்கேற்று கைதாகினர். மேலும், சிஐடியு கோவை மாவட்ட இருசக்கர மற்றும் நான்கு சக்கர வாகன பழுது பார்ப்போர் பணிமனை சங்கத்தினர் ஒருநாள் கடையடைப்பு செய்து மறியல் போராட்டத்தில் பங்கேற்றனர்.

ஈரோடு:
ஈரோடு பேருந்து நிலையம் அருகில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு ஐஎன்டியுசி மாவட்ட தலைவர் தங்கராஜூ தலைமை வகித்தார். இதில், சிஐடியு மாவட்ட தலைவர் எஸ்.சுப்பிரமணியன், ஏஐடியுசி மாவட்ட தலைவர் எஸ்.சின்னசாமி, தொமுச மாவட்ட கவுன்சில் தலைவர் வீ.கொளந்தசாமி, எச்எம்எஸ் மாவட்ட செயலாளர் பி.சண்முகம், ஏஐசிசிடியு மாநில செயலாளர் எ.கோவிந்தராஜ், எல்எல்எப் எ.வெற்றிச்செல்வன், எம்எல்எப் மாவட்ட செயலாளர் எஸ்.எஸ்.காளியப்பன் உள்ளிட்ட திரளானோர் பங்கேற்று கைதாகினர்.

நீலகிரி:
பந்தலூரில் நடைபெற்ற போராட்டத்திற்கு எல்பிஎப் மாவட்ட செயலாளர் மாடசாமி தலைமை வகித்தார். ஏஐடியுசி மாவட்ட தலைவர் பாலகிருஷ்ணன் துவக்கி வைத்தார். சிஐடியு மாநில துணை செயலாளர் கே.சி. கோபிக்குமார் முன்னிலை வகித்தார். சிஐடியு மாவட்டத் தலைவர் கே.ராஜன், டி.ரமேஷ், எம்.ஏ.சுரேஷ், சினி, சம்சுதீன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். உதகை ஏடிசி திடலில் நடைபெற்ற போராட்டத்திற்கு ஏஐடியுசி மாவட்ட செயலாளர் போஜராஜ் தலைமை வகித்தார். சிஐடியு மாவட்ட செயலாளர் ஜே.ஆல்தொரை, எல்பிஎப் மாநில செயலாளர் செல்வராஜ் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இதில் சிஐடியு சங்கத்தின் எஸ்.ரமேஷ், எல்பிஎப் குணசீலன், ஏஐடியுசி மூர்த்தி உள்ளிட்ட ஏராளமானோர் பங்கேற்று கைதாகினர்.மஞ்சூரில் நடைபெற்ற போராட்டத்திற்கு சிஐடியு மாவட்ட பொருளாளர் ரமேஷ் தலைமை வகித்தார். ஏஐடியுசி ஆரி முன்னிலை வகித்தார். விவசாயிகள் சங்க குந்தா பகுதி தலைவர் அலியார் உள்ளிட்ட ஏராளமானோர் பங்கேற்று கைதாகினர்.

சேலம்:
சேலம் பழைய பேருந்து நிலையம் முன்பு நடைபெற்ற மறியல் போராட்டத்தில் சிஐடியு மாவட்ட தலைவர் பன்னிர் செல்வம், செயலாளர் உதயகுமார், பொருளாளர் வி.இளங்கோ, சிபிஎம் மாவட்ட செயலாளர் பி.ராமமூர்த்தி, ஏஐடியுசி மாவட்ட செயலாளர் முனுசாமி, விமலன், எல்பிஎப் மணி, உள்ளிட்ட அனைத்து மத்திய தொழிற்சங்கங்ளைச் சேர்ந்த 300க்கும் மேற்பட்டோர் பங்கேற்று கைதாகினர்.

நாமக்கல்:
திருச்செங்கோட்டில் உள்ள இந்தியன் ஓவர்சீஸ் வங்கி முன்பு நடைபெற்ற போராட்டத்திற்கு சிஐடியு மாவட்ட துணை தலைவர் டி.ராமசாமி, ஏஐடியுசி மாவட்ட தலைவர் எஸ்.மணிவேல், எல்பிஎப் மாவட்ட செயலாளர் ஆர்.சுந்தரமூர்த்தி, ஐஎன்டியுசி மாவட்ட தலைவர் ஏ.கருப்பையா, எச்எம்எஸ் துணை தலைவர் கே.விஜயா ஆகியோர் தலைமை வகித்தார். மேலும், சிஐடியு மாவட்டக்குழு ஐ.ராயப்பன், ஏஐடியுசி மாவட்ட தலைவர் (சைசிங்) ராமலிங்கம், ஐஎன்டியுசி மாவட்ட நிர்வாகக்குழு ஆர். ராஜீ, எல்பிஎப் மாவட்ட செயற்குழு எஸ்.சவடமுத்து, எச்எம்எஸ் குழந்தைசாமி உள்ளிட்ட 200க்கும் மேற்பட்டோர் கைதாகினர்.

இராசிபுரத்தில் நடைபெற்ற மறியல் போராட்டத்திற்கு எச்எம்எஸ் மாவட்ட தலைவர் எஸ் தமிழ்செல்வி, சிஐடியு மாவட்ட இணை செயலாளர் எம்.ரங்கசாமி, ஏஐடியுசி தாலுகா இணை செயலாளர் எஸ்.மணிமாறன், எல்பிஎப் மாவட்ட துணை செயலாலளர் சி.மாதேஸ்வரன் ஆகியோர் தலைமை வகித்தனர். இதில் எச்எம்எஸ் மாவட்ட செயற்குழு எஸ்.சின்னுசாமி, சிஐடியு தாலுகா தலைவர் ஏ.கிருஸ்ணமுர்த்தி உள்ளிட்ட திரளானோர் பங்கேற்று கைதாகினர்.நாமக்கல் பிஎஸ்என்எல் அலுவலகம் முன்பு நடைபெற்ற போராட்டத்திற்கு சிஐடியு மாவட்ட செயலாளர் வேலுசாமி தலைமை வகித்தார். இதில் சிஐடியு மாவட்ட தலைவர் சிங்காரம், மாவட்ட துணை தலைவர் கு.சிவராஜ், சாலை போக்குவரத்து சங்கத்தின் மாவட்ட துணை தலைவர் சு.சுரேஸ் உள்ளிட்ட பலர் பங்கேற்று கைதாகினர்.குமாரபாளையத்தில் நடைபெற்ற மறியல் போராட்டத்திற்கு ஏஐடியுசி பாலசுப்பிரமணி, சிஐடியு எம்.ஆர்.முருகேசன், எச்எம்எஸ்சுந்திரமுர்த்தி ஆகியோர் தலைமை வகித்தனர். இதில் ஏஐடியுசி நஞ்சப்பன், சிஐடியு பாலுசாமி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

இதேபோல், பள்ளிப்பாளையத்தில் நடைபெற்ற போராட்டத்திற்கு சிஐடியு காசிவிஸ்வநாதன் தலைமை வகித்தார். சிஐடியு கெ.மோகன், எஸ்.முத்துகுமார் உள்ளிட்ட திரளானோர் பங்கேற்று கைதாகினர்.

Leave a Reply

You must be logged in to post a comment.