புதுக்கோட்டை,

புதுக்கோட்டையைச் சேர்ந்த மீனவர்கள் 8 பேரை இலங்கைக் கடற்படை கைது செய்யப்பட்டுள்ளனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
தமிழக மீனவர்களை இலங்கைக் கடற்படை சிறைபிடிக்கும் சம்பவங்கள் வாடிக்கையாக நடைபெற்றுவருகின்றன. எல்லை தாண்டி மீன்பிடிக்கும் குற்றச்சாட்டின்பேரில், இலங்கைக் கடற்படை இந்த நடவடிக்கையை எடுத்துவருகிறது. இந்நிலையில், நெடுந்தீவு அருகே மீன்பிடித்துக்கொண்டிருந்த புதுக்கோட்டை மாவட்டத்தைச் சேர்ந்த 8 மீனவர்களை இலங்கைக் கடற்படை கைதுசெய்துள்ளது. அவர்களிடமிருந்து 2 விசைப்படகுகளும் பறிமுதல்செய்யப்பட்டுள்ளன. கைதான மீனவர்கள், காங்கேசன்துறை கடற்படை முகாமுக்கு அழைத்துச்செல்லப்பட்டு, அவர்களிடம் விசாரணை மேற்கொள்ளப்பட்டது. விசாரணைக்குப் பின்னர் அவர்கள் யாழ்ப்பாணம் மீன் வளத்துறை அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டு, நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படுவார்கள் எனத் தெரியவருகிறது.
கைதுசெய்யப்பட்ட மீனவர்களை மீட்க, தமிழக அரசும் மத்திய அரசும் நடவடிக்கை எடுக்க வேண்டுமென்று மீனவர்களின் உறவினர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Leave A Reply

%d bloggers like this: