புதுச்சத்திரம், ஜன.25-
புதுச்சத்திரம் பகுதியில் சம்பளபாக்கியை வழங்கக்கோரி வாலிபர் ஒருவர் செல்போன் டவரில் ஏறி தற்கொலைக்கு முயன்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

நாமக்கல் மாவட்டம், புதுச்சத்திரம் அருகேயுள்ள அகரம் தத்தாதிரிபுரத்தில் பஞ்சாயத்து சார்பில் தண்ணீர் விடும் பணியினை சந்திரசேகரன் (எ) பாலு (32) என்பவர் மேற்கொண்டு வருகிறது. கடந்த முன்று வருடங்களுக்கும் மேலாக இப்பணியை மேற்கொண்டு வரும் இவருக்கு கடந்த 6 மாத காலமாக பஞ்சாயத்து நிர்வாகம் சம்பளம் வழங்காமல் இழுத்தடித்து வந்துள்ளது. இதனால் விரக்கியடைந்த சந்திரசேகரன் வியாழனன்று அப்பகுதியிலுள்ள செல்போன் டவரின் உச்சிக்கு சென்று தற்கொலை முயற்சியில் ஈடுபட்டார். இதையடுத்து தீயணைப்பு துறையினர், காவல் துறையினர் மற்றும் வட்டாட்சியர் ஆகியோர் சம்பவம் இடத்திற்கு வந்து சந்திரசேகரனை சமாதானப்படுத்தி கிழே இறக்கினர். இச்சம்பவம் காரணமாக அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பான சூழல் நிலவியது.

Leave A Reply

%d bloggers like this: