கோவை, ஐன. 25 –
சிங்கப்பூரில் இருந்து கோவைக்கு நூதன முறையில் ரூ.90 லட்சம் மதிப்பிலான தங்கத்தை கடத்தி வந்த இளைஞர் கைது செய்யப்பட்டார்.

சிங்கப்பூரில் இருந்து கோவை வரும் ஏர் இந்திய விமானத்தில் தங்கம் கடத்தி வரப்படுவதாக மத்திய வருவாய் புலனாய்வு பிரிவு அதிகாரிகளுக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதன்பேரில் அந்த விமானத்தில் வந்த பயணிகளிடம் அதிகாரிகள் சோதனை மேற்கொண்டனர். அப்போது சென்னையை சேர்ந்த இஜாஸ்கான் (24) என்ற இளைஞர் கொண்டு வந்த வாட்டர் குலர் கம்பரசரை சோதனை செய்தனர். இதில் வழக்கத்தை விட அதிக எடை கொண்ட அந்த கம்பரசை அதிகாரிகள் வெட்டி பார்த்தபோது, சிறு, சிறு கட்டிகளாக வெட்டப்பட்ட தங்கத்தை மோட்டரில் துளை மூலம் அடைத்து வைத்து கடத்தி கொண்டு வந்தது தெரியவந்தது. இதையடுத்து ரூ.90.52 லட்சம் மதிப்பிலான 2 ஆயிரத்து 920 கிராம் தங்கத்தை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். இதன்பின் அவரிடம் மேற்கொண்ட விசாரணையில் கோவை விமான நிலையத்திற்கு வெளியே காத்திருக்கும் வேறு ஒரு நபரிடம் ஒப்படைக்க இருந்ததாக கூறியுள்ளார். இதை தொடர்ந்து மத்திய வருவாய் புலனாய்வு பிரிவு அதிகாரிகள் இஜாஸ்கானை கைது செய்து, தங்கத்தை பெற இருந்த நபர் யார் என்பதும் குறித்தும், எதற்காக கடத்தி வரப்பட்டது என்பது குறித்தும் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Leave A Reply

%d bloggers like this: