திருப்பூர், ஜன. 24 –
திருப்பூரில் 20 அம்சக் கோரிக்கைகளை வலியுறுத்தி வருவாய்த்துறை அலுவலர் சங்கத்தினர் மண்டல அளவில் உண்ணாவிரதம் மேற்கொண்டனர்.

திருப்பூர் புதிய பேருந்து நிலையம் முன்பாக செவ்வாய்கிழமை நடைபெற்ற இந்த உண்ணாவிரதத்தில் திருப்பூர்,கோவை, ஈரோடு, நீலகிரி ஆகிய 4 மாவட்டங்களை சேர்ந்த வருவாய்த்துறை அலுவலர்கள் பங்கேற்றனர். இப்போராட்டத்துக்கு திருப்பூர் மாவட்ட த் தலைவர் தயானந்தன் தலைமை வகித்தார். மாவட்ட துணைத்தலைவர் பி.சண்முகவடிவேல் வரவேற்றார். தமிழ்நாடு வருவாய்த்துறை அலுவலர்கள் சங்கத்தின் முன்னாள் மாநில பொதுச் செயலாளர் டி.சிவஜோதி தொடங்கி வைத்து பேசினார்.

உண்ணாவிரதப் போராட்டத்தில் கோரிக்கைகளை விளக்கி திருப்பூர் மாவட்ட செயலாளர் ச.முருகதாஸ், கோவை மாவட்ட செயலாளர் அருள்முருகன், நீலகிரி மாவட்ட செயலாளர் கே.சிவகுமார், ஈரோடு மாவட்ட செயலாளர் குருராகவேந்திரன் ஆகியோர் பேசினர். வருவாய்த்துறையில் காலியாக உள்ள 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட இடங்களை நிரப்புவது, வருவாய்த்துறை அலுவலர்களுக்கு மேம்படுத்தப்பட்ட தனி ஊதியம் வழங்க வேண்டும். ஆகிய கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன. இதில் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

Leave A Reply

%d bloggers like this: