கோவை, ஜன. 24-
எப்ஆர்டிஐ மசோதாவை மத்திய அரசு திரும்ப பெற வலியுறுத்தி வங்கி ஊழியர்கள் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

வங்கிகிகளில் மக்கள் வைப்புத்தொகையாக வைத்துள்ள சேமிப்பு பணத்தை (எப்ஆர்டிஐ) மத்திய அரசு வங்கிகளின் பங்குகளாக மாற்றும் மசோதாவை முன்மொழிந்துள்ளது. இதனால் மக்கள் சேமிப்பு சூறையாடப்படும். கார்ப்பரேட் மற்றும் பெருமுதலாளிகள் வங்கிகளில் பெற்ற வாராக்கடனை வசூலிப்பதற்கான நடவடிக்கையை மேற்கொள்ளாமல், எளிய மக்களின் சேமிப்பு பணத்தை சூறையாட அனுமதிக்கமாட்டோம் என வலியுறுத்தி கோவையில் இந்திய வங்கி ஊழியர் சம்மேளனத்தின் சார்பில் புதனன்று கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

கோவை வெரைட்டிஹால் பகுதியில் உள்ள இந்தியன் வங்கி தலைமையகம் முன்பு நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்திற்குசிவானந்தம் தலைமை தாங்கினார். இந்த ஆர்ப்பாட்ட கோரிக்கைகளை விளக்கி சங்கத்தின் பொதுச்செயலாளர் ஆர்.மகேஷ்வரன், ஜெயபாலன், சிவலிங்கம் ஆகியோர் பேசினர். இந்த ஆர்ப்பாட்டத்தில் சங்க நிர்வாகிகள் கோபாலகிருஷ்ணன், சதீஸ்குமார், சங்கர் உள்ளிட்ட ஏராளமானோர் பங்கேற்றனர். முடிவில், கணேசன் நன்றி கூறினார்.

Leave a Reply

You must be logged in to post a comment.