இந்திய பொருளாதாரத்தின் வளர்ச்சி விகிதம் கடந்த 30 ஆண்டுகளில் இருந்ததை விட தற்போது பெரும் வீழ்ச்சியை சந்தித்துள்ளது என நாட்டின் முன்னாள் தலைமைப் பொருளாதார ஆலோசகர் கவுசிக் பாசு விவரித்திருக்கிறார். குறிப்பாக, பணமதிப்பு நீக்கத்தின் கொடூரமான விளைவுகள் தற்போதுதான் பொருளாதாரத்தை மிக தீவிரமாக பாதிக்க துவங்கியிருக்கிறது என அவர் நேர்காணல் ஒன்றில் தெரிவித்திருக்கிறார்.

அத்துடன் பொருத்தமற்ற முறையில் அவசர கதியாக, எவ்வித திட்டமிடலும் இன்றி ஜிஎஸ்டி வரிமுறை அமல்படுத்தப்பட்டதும் பொருளாதாரத்தை பின்னோக்கி தள்ளியிருக்கிறது எனவும் குறிப்பிட்டிருக்கிறார். வளர்ச்சிக்கு பதிலாக 30 ஆண்டுகால வீழ்ச்சியை மூன்றே ஆண்டுகளில் உருவாக்கியிருக்கிறது பாஜக அரசு. இந்திய வளர்ச்சியின் அடித்தளத்தில் இருக்கிற ஏழை – எளிய நடுத்தர இந்தியர்களை பற்றி இவர்களுக்கு எந்த கவலையும் இல்லை. கடந்த மூன்றாண்டு காலத்தில் மொத்த உள்நாட்டு உற்பத்தியின் 49 சதவீதத்தை அனுபவித்துக் கொண்டிருக்கிற ஒரு சதவீத பெரும் பணக்கார கார்ப்பரேட் இந்தியர்கள், தற்போது மொத்த உற்பத்தியின் 73 சதவீதத்தை அனுபவிக்க துவங்கியிருக்கிறார்கள். எஞ்சியவர்களுக்கு கிடைத்தது ஏதுமில்லை.

Leave A Reply

%d bloggers like this: