புதுக்கோட்டை:

புதுக்கோட்டையில் தனியார் மருத்துவமனையில் மருத்துவர்களின் அலட்சியத்தால் பெண் ஒருவர் உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
புதுக்கோட்டை மாவட்டம் அரங்கிரான்பட்டியைச் சேர்ந்த கணபதி. இவரது மனைவி மல்லிகா, மூச்சுத்திணறல் காரணமாக புதுக்கோட்டையில் உள்ள முத்துமீனாட்சி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இந்நிலையில் மல்லிகா புதனன்று காலை சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்தார். இதற்கிடையே மருத்துவர்கள் பணியில் இல்லாததும், முறையான சிகிச்சை அளிக்காததும் தான் மல்லிகாவின் உயிரிழப்புக்குக் காரணம் என கூறி அவரது உறவினர்கள், மருத்துவமனையை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். இதுகுறித்து தகவல் அறிந்து வந்த காவல்துறையினர் போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் பேச்சு வார்த்தை நடத்தி போராட்டத்தை கைவிட செய்தனர். மேலும் இதுகுறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Leave A Reply

%d bloggers like this: