நீலகிரி, ஜன. 24-
ஜனவரி 28 ஆம் தேதியன்று போலியோ தடுப்பு சிறப்பு முகாம் நடைபெற உள்ளது. இளம் பிள்ளை வாதத்தை ஒழிக்க, ஒவ்வொரு வருடமும் நாடு முழுவதும் தீவிர போலியோ சொட்டு மருந்து முகாம் நடத்தப்பட்டு வருகின்றது. இந்த வருடம் முதற்கட்டமாக ஜன.28 மற்றும் இரண்டாம் கட்டமாக மார்ச் 11 (ஞாயிற்றுக்கிழமை) அன்றும் நீலகிரி மாவட்டத்திலுள்ள 5 வயதிற்குட்பட்ட அனைத்து குழந்தைகளுக்கும் இலவசமாக போலியோ சொட்டு மருந்து வழங்கப்பட உள்ளது. அனைத்து அரசு மருத்துவமனைகளிலும், ஆரம்ப சுகாதார துணை நிலையங்களிலும், தனியார் மருத்துவமனைகளிலும், பள்ளிகளிலும், குழந்தைகள் காப்பகம் போன்ற இடங்களிலும் இந்த முகாம் நடைபெறவுள்ளது. ஆகவே, பெற்றோர்கள் ஐந்து வயதிற்குட்பட்ட அனைத்து குழந்தைகளையும், தங்கள் வீட்டிற்கு அருகிலுள்ள இலவச போலியோ சொட்டு மருந்து வழங்கும் முகாமிற்கு அழைத்து சென்று பயன்பெறுமாறு நீலகிரி மாவட்ட ஆட்சியர் ஜெ.இன்னசென்ட் திவ்யா கேட்டுக்கொண்டுள்ளார்.

Leave a Reply

You must be logged in to post a comment.