சாமியார்களை நினைத்தால்
திக்கென்றிருக்கிறது…

காவியாடை
வெட்கத்தில் சிவக்கிறது..

விரல்களில் உருள வேண்டிய ருத்ராட்ச மாலை
அவர்களின்
இதழ்களில் உருள்கிறது…

அவர்கள்
நிற்க வேண்டிய இடத்தில்
உட்கார்ந்திருக்கிறார்கள்
உட்கார வேண்டிய இடத்தில்
உறங்கிவிடுகிறார்கள்

சாமியார்களை நினைத்தால்
திக்கென்றிருக்கிறது

– பழநிபாரதி

Leave a Reply

You must be logged in to post a comment.