ஜெயேந்திரர் நீதிபதியோடு பேசிய உரையாடல் வெளியானதையொட்டி, உயர்நீதிமன்றம் விசாரணைக்கு விதித்திருந்தது. இதையடுத்து, காஞ்சிபுரத்தில், பத்திரிக்கையாளர் சந்திப்பு நடந்தது.

சென்னையிலிருந்து பத்திரிக்கையாளர்கள் அழைக்கப்பட்டனர். முன்னணி தொலைக்காட்சி நிருபர்கள், சென்றனர். காஞ்சிபுரம் பத்திரிக்கையாளர்களும் வந்திருந்தனர். சுவாமி வருவார், உள்ளே வாருங்கள் என்று அழைக்கப்பட்டனர். உள்ளே சென்றால் பெரிய அறை. அதில் ஒரே ஒரு நாற்காலி மட்டும் போடப்பட்டிருந்தது. காஞ்சிபுரம் பத்திரிக்கையாளர்கள், உள்ளே சென்றதும் தரையில் அமர்ந்து கொண்டார்கள்.

சென்னை பத்திரிக்கையாளர்கள், எங்களுக்கும் நாற்காலி வேண்டும் என்றதும், இது மடத்தின் விதி. பெரியவர்தான் அமர்வார். மற்றவர்கள் நிற்க வேண்டும் என்றனர். வேறு வழியின்றி நின்ற பத்திரிக்கையாளர்கள் கேள்வி கேட்க தொடங்கியதும், ஜெயேந்திரரோடு நின்ற அல்லு சில்லுகள், பெரியவாகிட்ட கேள்வி கேட்கக் கூடாது என்றனர். இது பத்திரிக்கையாளர் சந்திப்பு. கேள்வி கேட்போம் என்றதும், ஜெயேந்திரர் எழுந்து சென்று விட்டார்.

மடத்தின் விதியை மற்றவர்கள் பின்பற்ற வேண்டும் என்றால், பொது விதியை / மரபை இந்த சாமியார்களும் பின்பற்ற வேண்டும் தானே ?

Leave a Reply

You must be logged in to post a comment.