மும்பை,

வரும் 2019 நாடாளுமன்ற தேர்தலில் தனித்து போட்டியிட போவதாக சிவசேனா கட்சி அறிவித்துள்ளது.

மகாராஷ்டிர மாநிலத்தில் சிவசேனா கட்சி, பாஜகவுடன் 29 ஆண்டு காலமாக கூட்டணியில் உள்ளது. மத்தியிலும், மாநிலத்திலும் தற்போதைய பாஜக தலைமையிலான அரசில், சிவசேனாவும் பங்கேற்றுள்ளது. ஆனால் கடந்த சட்டப்பேரவைத் தேர்தலின் போது தொகுதி பங்கீட்டில் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக இருகட்சிகளுக்கும்  தனித்து போட்டியிட்டன.

இந்நிலையில் இன்று நடந்த சிவசேனா கட்சியின் தேசிய செயற்குழு கூட்டத்தில், வரும் 2019 நாடாளுமன்ற தேர்தலிலும் மகாராஷ்டிரா சட்டமன்ற தேர்தலிலும் தனித்து போட்டியிட சிவசேனா முடிவு எடுக்கப்பட்டுள்ளது. மேலும் யுவ சேனா தலைவர் ஆதித்ய தாக்கரேவை சிவசேனாவின் தேசிய செயற்குழு உறுப்பினராக நியமிக்கவும் தீர்மானம்  நிறைவேற்றப்பட்டது.

இதுகுறித்து அக்கட்சியின் மூத்த தலைவர் சஞ்சய் ரவுத் கூறுகையில், வரும் 2019 நாடாளுமன்ற தேர்தலில் தனித்து போட்டியிட முடிவு செய்துள்ளோம். வரும் நாடாளுமன்ற தேர்தலில் மகாராஷ்டிராவில் மொத்தமுள்ள 48 இடங்களில் 25 இடங்களை பிடிக்கவும், சட்டப்பேரவைத் தேர்தலில் மொத்தமுள்ள 288 தொகுதிகளில், 150 இடங்களை கைப்பற்றவும் இலக்கு நிர்ணயித்துள்ளோம் என்றார்.

Leave a Reply

You must be logged in to post a comment.