இராமேஸ்வரம்;
கடலில் மீன்பிடிக்க சென்ற சுமார் இரண்டாயிரம் தமிழக மீனவர்களை, இலங்கை கடற்படையினர் விரட்டியடித்துள்ளனர்.50 படகுகளில் இருந்த மீன்பிடி வலைகளையும் அவர்கள் சேதப்படுத்தியுள்ளனர்.
ராமேஸ்வரம் பகுதியில் இருந்து 489 படகுகளில் சுமார் இரண்டாயிரம் மீனவர்கள், திங்கட்கிழமையன்று மாலை மீன் பிடிப்பதற்காக கடலுக்குள் சென்றனர்.

இவர்கள், கச்சத்தீவு அருகே மீன்பிடித்து கொண்டிருந்தபோது இன்று காலை அவ்வழியாக இயந்திரப் படகுகளில் வந்த இலங்கை கடற்படையினர், தமிழக மீனவர்களைத் திரும்பிச் செல்லும்படி கற்களை வீசி தாக்கியுள்ளனர். மேலும், தமிழக மீனவர்களுக்குச் சொந்தமான 50 படகுகளில் இருந்த மீன்பிடி வலைகளையும் கிழித்து நாசப்படுத்தினர்.

இதையடுத்து, மீனவர்கள் அனைவரும் இலங்கை கடற்படையினரிடமிருந்து தப்பி, கரைக்குத் திரும்பினர். கடந்த ஜனவரி 7-ஆம் தேதியும் இதேபோல் 800-க்கு மேற்பட்ட படகுகளில் சென்ற சுமார் 4 ஆயிரம் மீனவர்களை விரட்டியடித்த இலங்கை கடற்படையினர் அவர்கள் கொண்டு சென்ற மீன்பிடி வலைகளை பறித்துக் கொண்டனர். ஜனவரி 9-ஆம் தேதியன்றும், இராமேஸ்வரம் மற்றும் மண்டபம் பகுதியில் இருந்து 650 படகுகளில் 3500-க்கு மேற்பட்ட மீனவர்களை தாக்கி அடித்து விரட்டியதுடன், சில படகுகளை சேதப்படுத்தி, சுமார் 50 படகுகளில் இருந்த மீன்பிடி வலைகளை நாசப்படுத்தினர். தற்போது மீண்டும் அவர்கள் தமிழக மீனவர்களை விரட்டியடித்துள்ளனர்.

Leave A Reply

%d bloggers like this: