ஈரோடு,
வீட்டுமனைக்கு பட்டா வழங்கக்கோரி பவானி வட்டாட்சியரிடம் மார்க்சிஸ்ட் கட்சியினர் மனு அளித்தனர்.

பவானி தாலுகா ஆப்பக்கூடல் பேரூராட்சி கரட்டுப்பாளையம் பகுதியில் உள்ள பாளிக்கரடு பகுதியில் 9 குடும்பங்களை சேர்ந்தவர்கள் சுமார் 20 ஆண்டுகளுக்கும் மேலாக வசித்து வருகின்றனர். இம்மக்கள் தாங்கள் வசிக்கும் இடத்திற்கு பட்டா கேட்டு பலமுறை மனு கொடுத்தும் இதுவரை பட்டா வழங்கப்படவில்லை. இதனால் சாலை, சாக்கடை, தெருவிளக்கு, மின்இணைப்பு உள்ளிட்ட எவ்விதமான அடிப்படை வசதிகளும் இல்லாமல் வசிக்க வேண்டிய நிலை உள்ளது. எனவே, இப்பகுதி மக்களுக்கு பட்டா மற்றும் அடிப்படை வசதிகள் செய்து கொடுக்க வேண்டும் என வலியுறுத்தி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பவானி தாலுகா செயலாளர் எ.ஜெகநாதன், கமிட்டி உறுப்பினர் டி.ரவீந்திரன் தலைமையில் பாதிக்கப்பட்ட மக்கள் பவானி வட்டாட்சியரிடம் மனு அளித்தனர்.

Leave A Reply

%d bloggers like this: