ஈரோடு, ஜன.23-
தேவாலயங்கள் மீது நடத்தப்படும் தாக்குதல்களை தடுக்க உரிய நடவடிக்கை எடுக்கக்கோரி ஈரோடு மாவட்ட காவல் கண்காணிப்பாளரிடம் மனு அளிக்கப்பட்டது.

ஈரோடு, பழனி, கோவை மற்றும் சென்னை போன்ற இடங்களில் கிறிஸ்தவ பாதிரியார்கள் மீதும், தேவாலயங்கள் மீதும் இந்துத்துவ அமைப்பினர் திட்டமிட்டு தொடர்ந்து தாக்குதல்களை நடத்தி வருகின்றனர். இந்நிலையில் கடந்த சனிக்கிழமை காஞ்சிபுரத்திலுள்ள தேவாலயத்திற்குள் அத்துமீறி நுழைந்த இந்துத்துவ சக்திகள் தாக்குதல் நடத்தியதுடன், கிதியோன் என்ற பாதிரியாரை கொன்று தூக்கில் தொங்க விட்டுள்ளனர். இந்த செய்தி கிறிஸ்துவ சமூக மக்களுடையே பெரும் அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது. இந்தசெயலை வன்மையாக கண்டிக்கிறோம்.

இத்தகைய சம்பவத்தில் தொடர்புடைய குற்றவாளிகள் மீது தமிழகஅரசு கடும் நடவடிக்கை எடுத்திட வேண்டும். மேலும், இது போன்ற சம்பவங்கள் மீண்டும் நடக்காமல் இருக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தி ஈரோடு மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் ஆர்.சிவக்குமாரிடம் செவ்வாயன்று கிறிஸ்தவ இயக்கம் சார்பில் ஜோசுவா ஸ்டீபன் தலைமையில் மனு அளித்தனர்.

Leave a Reply

You must be logged in to post a comment.