திருப்பூர், ஜன. 23-
தமிழில் சிறந்த மொழிபெயர்ப்பாளருக்கான விகடன் விருது பெற்ற தமுஎகச திருப்பூர் மாவட்ட துணை தலைவரும், ஆரம்ப பள்ளி ஆசிரியர் கூட்டணியின் முன்னாள் மாநிலப் பொதுச் செயலாளருமான ஊத்துக்குளி செ.நடேசனுக்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் பாராட்டு தெரிவிக்கப்பட்டது.

ஊத்துக்குளி ஆர்.எஸ்சில் உள்ள அவரது இல்லத்தில் செவ்வாயன்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் திருப்பூர் மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் சி.மூர்த்தி, ஆர்.குமார், ஊத்துக்குளி தாலுகா செயலாளர் கே.ஏ.சிவசாமி, கமிட்டி உறுப்பினர்கள் எஸ்.கே.கொளந்தசாமி, கை.குழந்தைசாமி, வி.கே.பழனிசாமி, கே.சரஸ்வதி ஆகியோர் அவரை நேரில் சந்தித்து வாழ்த்து தெரிவித்தனர். முன்னதாக, காஷ்மீர் தேசியத்தின் பல்வேறு முகங்கள் என்ற நூலை தமிழில் சிறப்பாக மொழியாக்கம் செய்ததற்காக செ.நடேசனுக்கு விகடன் விருது வழங்கப்பட்டது. மதவெறி சக்திகளை கருத்தியல் ரீதியாகவும், செயல்பாடுகளிலும் அம்பலப்படுத்தும் முக்கியமான படைப்புகளை நடேசன் தொடர்ச்சியாக தமிழ்ச் சமூகத்துக்கு மொழிபெயர்த்து வழங்கி வருகிறார். மராத்திய மன்னன் சிவாஜி பற்றி மதவெறி சக்திகள் கட்டமைத்த பிராமணீய பிம்பத்தை தகர்த்து மாற்று கண்ணோட்டத்தில் முன்வைத்த கோவிந்த் பன்சாரேவின் அற்புதமான நூலை இவர் தமிழில் மொழிபெயர்த்துள்ளார். அத்துடன் சீன அக்குபஞ்சர் மருத்துவம் பற்றிய நூலை மொழி பெயர்த்துள்ளார். புற்றுநோயை எதிர்கொள்வது பற்றி ஒரு புத்தகத்தையும் எழுதியுள்ளார்.

Leave a Reply

You must be logged in to post a comment.