தில்லி,

மருத்துவப் படிப்புகளில் சேருவதற்கு நீட் எனப்படும் தேசிய அளவிலான நுழைவுத் தேர்வை மத்திய அரசு நடத்தி வருகிறது. தனியார் மருத்துவக் கல்லூரிகள் கொள்ளை லாபம் அடிப்பதைத் தடுக்கவும், கல்வியின் தரத்தை உயர்த்தவும், இந்த தேர்வு முறையை அறிமுகப்படுத்தியதாக மத்திய அரசு கூறி உள்ளது.
ஆனால், சி.பி.எஸ்.இ. தரத்தில் கேள்வித்தாள் இடம் பெற்றிருப்பதால், மாநில பாடத்திட்டங்களில் படித்த மாணவர்களுக்கு நீட்தேர்வு பெரும் சவாலாக உள்ளது. குறிப்பாக கிராமப்புற மாணவர்கள் நீட்வால் பெருமளவு பாதிக்கப்படுகின்றனர். இதனால் நீட் கோச்சிங் சென்டர்கள் பல இடங்களில் தொடங்கப்பட்டு பல ஆயிரக்கணக்கான ரூபாய் வசூல் செய்யப்படுவதாக சமூக ஆர்வலர்கள் குற்றச்சாட்டி வருகின்றனர்.

இந்நிலையில், 2018-ம் ஆண்டுக்கான நீட் தேர்வு மே மாதம் 6-ம்தேதி நடைபெறும் என சி.பி.எஸ்.இ. அறிவித்துள்ளது. எய்ம்ஸ் மற்றும் ஜிப்மர் மருத்துவ மாணவர் சேர்க்கைக்கு நீட் தேர்வில் இருந்து விலக்கு அளிக்கப்பட்டிருப்பதாகவும் கூறப்பட்டுள்ளது. நீட் தேர்வுக்கான பாடத்திட்டத்தில் இந்த ஆண்டு மாற்றங்கள் ஏதும் செய்யப்படவில்லை

Leave A Reply