கோவை, ஜன.22-
உயர்த்தப்பட்ட பேருந்து கட்டணத்தை உடனடியாக திரும்பப் பெற வலியுறுத்தி திங்களன்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் கோபாவேச ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

கோவையில் கட்சியின் கிழக்கு நகரக்குழுவின் சார்பில் புலியகுளம் தந்தை பெரியார் சிலை முன்பு நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு நகரக்குழு உறுப்பினர் த.நாகராஜ் தலைமை தாங்கினார். மாவட்டக்குழு உறுப்பினர் யு.கே.சிவஞானம் கண்டன உரையாற்றினார். கோவை பேரூர் நகரக்குழுவின் சார்பில் செல்வபுரம் சிவாலயா திரையரங்கம் முன்பு நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு நகரச் செயலாளர் பாலசுப்பிரமணியம் தலைமை தாங்கினார். மாவட்ட செயற்குழு உறுப்பினர் எஸ்.ஆறுமுகம் கண்டன உரையாற்றினார். மேற்கு நகரக்குழு சார்பில் காந்திபார்க் பேருந்து நிலையம் முன்பு நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு நகரக்குழு உறுப்பினர் ராதா தலைமை தாங்கினார். இதில் சட்டமன்ற முன்னாள் உறுப்பினர் கே.சி.கருணாகரன், நகரச் செயலாளர் பி.கே.சுகுமாறன் ஆகியோர் கண்டன உரையாற்றினார். இதில்கட்சியின் மாவட்டக்குழு உறுப்பினர்கள் என்.வி.தாமோதரன், எ.ராதிகா, தீபக்உள்ளிட்ட ஏராளமானோர் ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்று முழக்கங்களை எழுப்பினர். கோவை வடக்கு நகரக்குழுவின் சார்பில் கணபதி டெக்ஸ்டூல் அருகே நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு நகரக்குழு உறுப்பினர் நாராயணசாமி தலைமை தாங்கினார். இதில் சட்டமன்ற முன்னாள் உறுப்பினர் யு.கே.வெள்ளிங்கிரி, மாவட்ட செயற்குழு உறுப்பினர் எஸ்.அமுதா, நகரச் செயலாளர் என்.ஆர்.முருகேசன் ஆகியோர் கண்டன உரையாற்றினர். எஸ்.எஸ்.குளம் ஒன்றியக் குழுவின் சார்பில் காளப்பட்டியில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு ஒன்றிய செயலாளர் ஆர்.கோபால்தலைமை தாங்கினார். மாவட்ட செயலாளர் வி.இராமமூர்த்தி கண்டன உரையாற்றினார்.

இதில் மாவட்டக்குழு உறுப்பினர்கள் எஸ்.புனிதா, கே.எஸ்.கனகராஜ் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். இதேபோல், கோவை மதுக்கரை ஒன்றியக்குழுவின் சார்பில் மலுமிச்சம்பட்டி பேருந்து நிலையம் அருகில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு மாவட்ட செயற்குழு உறுப்பினர் எஸ்.கருப்பையா தலைமை தாங்கினார். ஒன்றிய செயலாளர் ரவிச்சந்திரன், மாவட்டக்குழு உறுப்பினர் வி.பி.இளங்கோவன் ஆகியோர் கண்டன உரையாற்றினர். அன்னூர் ஒன்றியக்குழுவின் சார்பில் அன்னூர் பேருந்து நிலையம் முன்பு நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு ஒன்றியக்குழு உறுப்பினர் அர்ஜூன் தலைமை தாங்கினார். மாவட்ட செயற்குழு உறுப்பினர் கே.மனோகரன், ஒன்றிய செயலாளர் முகமதுமுசீர் ஆகியோர் கண்டன உரையாற்றினர். ஆனைமலை ஒன்றியத்திற்குட்பட்ட கோட்டூர் பேரூராட்சி தெற்கோட்டுவாய்க்காலில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு துண்டுகிடவு கிளை செயலாளர் ஆர்.ஜெயசீலன் தலைமை தாங்கினார். மாவட்டக்குழு உறுப்பினர் யு.கே.சிவஞானம், ஆனைமலை ஒன்றிய செயலாளர் வி.பரமசிவம் ஆகியோர் கண்டன உரையாற்றினர்.

திருப்பூர்:
திருப்பூர் மாவட்டம், பல்லடம் கொசவம்பாளையம் சாலைப் பிரிவில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்துக்கு ஒன்றியக்குழு உறுப்பினர் அஷ்ரப் அலி தலைமை வகித்தார். இதில் மாவட்டச் செயலாளர் கே.காமராஜ், ஒன்றியச் செயலாளர் ஆர்.பரமசிவம் ஆகியோர் கண்டனஉரையாற்றினர். காங்கயம் பேருந்துநிலையத்தில் தாலுகா செயலாளர் ஆர்.திருவேங்கடசாமி தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. திருப்பூர் தெற்கு ஒன்றிய குழு சார்பில் வீரபாண்டி பேருந்து நிலையத்தில் பேருந்தை மறித்து ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது. இந்த ஆர்ப்பாட்டத்தில் கட்சியின் ஒன்றியச் செயலாளர் சி.மூர்த்தி உட்பட பலர் பங்கேற்றனர். உடுமலை ஒன்றியம் பள்ளபாளையத்தில் ஒன்றியச் செயலாளர் கி.கனகராஜ் உள்படபெருந்திரளானோர் கலந்து கொண்டு கட்டண உயர்வை எதிர்த்து முழக்கமிட்டனர்.

அவிநாசி புதிய பேருந்து நிலையம் அருகில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் ஒன்றிய செயலாளர் எஸ். வெங்கடாசலம், மாவட்டக்குழு உறுப்பினர்கள் பி.முத்துச்சாமி, ஏ. ஈஸ்வரமூர்த்தி உட்பட பலர் கலந்து கெண்டனர். ஊத்துக்குளி டவுனில் தாலுகா குழு உறுப்பினர் கே.பெரியசாமி தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் மாவட்ட செயற்குழு உறுப்பினர் ஆர்.குமார், தாலுகா செயலாளர் கே.ஏ.சிவசாமி ஆகியோர் கண்டன உரையாற்றினர். அனுப்பர்பாளையத்தில் நடந்த ஆர்ப்பாட்டத்திற்கு நகர குழு உறுப்பினர் ஆ.மணவாளன் தலைமை வகித்தார். இதில் மாவட்ட செயற்குழு உறுப்பினர் கே.ரங்கராஜ், வேலம்பாளையம் நகர செயலாளர் வி.பி.சுப்பிரமணியம் ஆகியோர் கண்டன உரையாற்றினர். பாண்டியன் நகரில் நடந்த ஆர்ப்பாட்டத்திற்கு வடக்கு ஒன்றியக்குழு உறுப்பினர் ஆர்.காளியப்பன் தலைமைவகித்தார், ஒன்றிய செயலாளர் பி.பழனிசாமி உட்பட பலர் பங்கேற்றனர். திருப்பூர் புதிய பேருந்து நிலையத்தில் நடந்த ஆர்ப்பாட்டத்திற்கு வடக்கு மாநகர செயலாளர் முருகேஷ் தலைமை வகித்தார். மாவட்ட செயற்குழு உறுப்பினர் என்.கோபாலகிருஷ்ணன் உட்பட திரளானோர் பங்கேற்றனர்.

இதேபோல், இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம் சார்பில் திருப்பூர் தெற்கு மாநகரம் கருவம்பாளையம் பேருந்து நிறுத்தம் அருகே நடைபெற்ற ஆர்ப்பாட்டத்துக்கு சங்க நகரத்தலைவர் சஞ்சீவ் தலைமை வகித்தார். மாநிலச் செயலாளர் எஸ்.பாலா,மாவட்டச் செயலாளர் செ.மணிகண்டன், நகரச் செயலாளர் ஞானசேகர் மற்றும் சிபிஎம் மாநகரச் செயலாளர் டி.ஜெயபால் ஆகியோர் கண்டன உரையாற்றினர்.பல்லடத்தில் பிஎஸ்என்எல் அலுவலகம் முன்பாக பிஎஸ்என்எல் ஊழியர் சங்கத்தின் நிர்வாகிகள் முருகசாமி, காந்தி உள்ளிட்டோர் தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

ஈரோடு:
ஈரோடு மாவட்டம், கோபி பேருந்து நிறுத்தம் அருகில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு தாலுகா செயலாளர் கெம்பராஜ் தலைமை தாங்கினார். மாவட்ட
செயலாளர் ஆர்.ரகுராமன், மாவட்டசெயற்குழு உறுப்பினர்கள் முத்துசாமி, முனுசாமி, மாவட்டக்குழு உறுப்பினர்கள் வி.ஆர்.மாணிக்கம், எஸ்.வி.மாரிமுத்து ஆகியோர் கண்டன உரையாற்றினர். பெருந்துறை பேருந்து நிறுத்தத்தில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு கிளை செயலாளர் பி.ஜெகநாதன் தலைமை வகித்தார். தாலுகாசெயலாளர் கே.குப்புசாமி, மாவட்டக்குழு உறுப்பினர் கே.ரவி ஆகியோர் கோரிக்கைகளை விளக்கி பேசினர். கருமாண்டாம்பாளையம் பகுதியில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு தாலுகாகமிட்டி உறுப்பினர் ஆர்.சிவலிங்கம் தலைமை வகித்தார். மாவட்ட செயற்குழு உறுப்பினர் பி.பழனிசாமி, மொடக்குறிச்சி, கொடுமுடி தாலுகா செயலாளர் கே.பி.கனகவேல், மாவட்டகுழு உறுப்பினர் கே.சண்முகவள்ளி ஆகியோர் கோரிக்கைகளை விளக்கி பேசினர்.

நாமக்கல்:
நாமக்கல் பேருந்து நிலையம் அருகேயுள்ள குளக்கரை திடலில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு நாமக்கல்பிரதேச குழு செயலாளர் பி.ஜெயமணி தலைமை தாங்கினார். மாவட்ட செயலாளர் எஸ்.கந்தசாமி, மாவட்டக்குழு உறுப்பினர்கள் சி.துரைசாமி, கு.சிவராஜ், பி.ராமசாமி, செங்கோடன் ஆகியோர் கண்டன உரையாற்றினர். நாமகிரிப்பேட்டையில் நடைபெற்ற ஆர்ப்பாட்டததிற்கு ஒன்றிய செயலாளர் கே.சின்னுசாமி தலைமை வகித்தார். மாவட்ட செயற்குழு உறுப்பினர் கே.தங்கமணி, மாவட்ட குழு உறுப்பினர் செல்வராஜ் கண்டன உரையாற்றினார். முத்துகாபட்டியில் நடைபெற்ற கண்டனஆர்பாட்டத்திற்கு பிரேதேச குழு உறுப்பினர் வி.சதாசிவம் தலைமை வகித்தார். மாவட்ட செயற்குழு உறுப்பினர் பி.ஜெயமணி, மாவட்ட குழு உறுப்பினர் சி.துரைசாமி ஆகியோர் கண்டன உரையாற்றினார். எலச்சிப்பாளையத்தில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு பி.சுந்தரம் தலைமை வகித்தார். ஓன்றிய செயலாளர் சு.சுரேஷ், மாவட்ட குழு உறுப்பினர் கோமதி ஆகியோர் கண்டன உரையாற்றினர்.

திருச்செங்கோடு அண்ணா சிலைஅருகில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு ஒன்றிய செயலாளர் ஆர்.வேலாயுதம் தலைமை வகித்தார். மாவட்ட செயற்குழு உறுப்பினர் ஏ.ஆதிநாராயணன், மாவட்டக்குழு உறுப்பினர் எம்.கணேஷ்பாண்டியன், நகர செயலர் ஐ.ராயப்பன் ஆகியோர் கண்டன உரையாற்றினர். வெப்படையில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு மாவட்ட குழு உறுப்பினர் எஸ்.தனபால் தலைமை வகித்தார். மாவட்ட செயற்குழு உறுப்பினர் பி.பெருமாள், ஒன்றிய செயலாளர் முருகேசன் ஆகியோர் கண்டன உரையாற்றினர்.

நீலகிரி:
கூடலூர் புதிய பேருந்து நிலையம்முன்பு தாலுகா செயலாளர் குஞ்சு முகமது தலைமையில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் மாவட்ட செயற்குழு உறுப்பினர் என்.வாசு கண்டன உரையாற்றினார். குன்னூரில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு தாலுகா செயலாளர் ரமேஷ் தலைமை வகித்தார். மாவட்ட செயற்குழு உறுப்பினர் ஜே.ஆல்தொரை கண்டன உரையாற்றினார். முன்னதாக, மேட்டுபாளையம் செல்லும் பேருந்து நிலையத்தில் மாட்டுவண்டியில் பொதுமக்களை ஏற்றிச்சென்று தங்களது எதிர்ப்பை தெரிவித்தனர். இதேபோல், அதிகரட்டி பேருந்து நிலையம் முன்பு சிஐடியு சார்பில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு ராமநாதன் தலைமை வகித்தார். சிஐடியு மாவட்ட செயலாளர் ஜே.ஆல்தொரை கண்டன உரையாற்றினார்.

சேலம்:
சேலம் ராமகிருஷ்ணா சாலையில் உள்ள போக்குவரத்து கோட்டம் தலைமையகம் முன்பு மார்க்சிஸ்ட் கட்சியின் வடக்கு மாநகர செயலாளர் எம்.முருகேசன் தலைமையில் முற்றுகை போராட்டம் நடைபெற்றது. இதில் பங்கேற்றவர்கள் டோலிபோல் மனிதர்களை தூக்கிக் கொண்டும், தட்டில் பிச்சை எடுப்பது போன்ற நூதன போராட்டத்தில் ஈடுபட்டனர். இதையடுத்து போராட்டத்தில் பங்கேற்ற கட்சியின் மாநிலக்குழு உறுப்பினர் கே.ஜோதிலட்சுமி உள்ளிட்ட அனைவரையும் காவல்துறையினர் கைது செய்தனர்.

இதேபோல், இந்திய ஜனநாயகவாலிபர் சங்கத்தைச் சேர்ந்த நூற்றுக்கும் மேற்பட்டோர் இரண்டு மாட்டு வண்டிகளுடன் நூதன போராட்டத்தில் ஈடுபட்டனர். இப்போராட்டத்திற்கு சங்கத்தின் மாவட்ட தலைவர் பி.கந்தசாமி தலைமை வகித்தார். மாவட்ட செயலாளர் பிரவீன்குமார், மாவட்ட பொருளாளர் வெங்கடேஷ் ஆகியோர் கண்டன உரையாற்றினர்.இப்போராட்டங்களில் நூற்றுக்கணக்கானோர் பங்கேற்று தமிழக அரசின் அநியாய பேருந்து கட்டண உயர்வைக்கண்டித்து ஆவேச முழக்கங்களை எழுப்பினர்.

Leave a Reply

You must be logged in to post a comment.