ஈரோடு, ஜன.22-
ஈரோட்டில் நீர் நிலை ஆக்கிரமிப்புகளை ஆய்வு செய்த பின்னரே நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என வலியுறுத்தி பொதுமக்கள் மாவட்ட ஆட்சியர் மற்றும் மாநகராட்சி ஆணையரிடம் மனு அளித்தனர்.

ஈரோடு மாவட்டம், பவானி நகரம் ஆ கிராமம் திருவள்ளுவர் நகரில் 34 ஆண்டுகளாக 100க்கும் மேற்பட்டவர்கள் வசித்து வருகிறார்கள்..இவர்களுக்கு குடும்ப அட்டை, ஆதார் அட்டை, வாக்காளர் அடையாள அட்டை, மின்சார இணைப்பு, சாக்கடை, சாலை, குடிநீர் மற்றும் கழிப்பிடம் போன்ற அனைத்து அடிப்படை வசதிகளையும் நகராட்சி மூலம் செய்து கொடுக்கப்பட்டுள்ளது. ஆனால், இதுவரை குடியிருக்கும் இடத்திக்கு பட்டா வழங்கப்படவில்லை. இந்நிலையில் தற்போது திடிரென நீர் நிலை ஆக்கிரமிப்பு என பவானி வட்டாட்சியர் மூலம் குடியிருப்பு வீடுகளை அப்புறப்படுத்த நோட்டீஸ் வழங்கப்பட்டுள்ளது. எனவே, இதுதொடர்பாக உரிய ஆய்வு செய்து குடியிருப்புகளுக்கு பட்டா வழங்க வேண்டும் எனக்கோரி அப்பகுதியினர் திங்களன்று மாவட்ட வருவாய் அலுவலர் ச.கவிதாவிடம் மனு அளித்தனர்.

இதேபோல், ஈரோடு தாலுகா பொய்யேரிக்கரை, குளத்துப் பனை, வள்ளியம்மாள் நகர், பாரதி நகர்,மேட்டு நாயம் பாளையம் ஆகிய பகுதிகளை சேர்ந்த 300க்கும் மேற்பட்டவர்கள் ஓடையின் அருகே வீடு கட்டி வசித்து வருகிறார்கள். இந்நிலையில், இந்த பகுதிகள் நீர் நிலை ஆக்கிரமிப்பில் வருவதாக கூறி நோட்டீஸ் வழங்கப்பட்டுள்ளது. எனவே, பழைய பதிவேடுகளையும், ஆக்கிரமிப்புகளை நேரில் ஆய்வு செய்த பின்னரே நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என வலியுறுத்தி மாநகராட்சி ஆணையர் சீனி அஜ்மல்கானிடம், அப்பகுதி மக்கள் மனு அளித்தனர்.

Leave A Reply

%d bloggers like this: