திருப்பூர், ஜன. 22 –
ஆசிரியப் பணியில் இளையோர், மூத்தோர் ஊதிய முரண்பாட்டைக் களையவும், இதர பாரபட்சங்களைக் களையவும் வலியுறுத்தி தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி சார்பில் ஊத்துக்குளியில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

ஊத்துக்குளி தொடக்க கல்வி அலுவலகம் முன்பாக திங்களன்று நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்துக்கு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி வட்டாரத் தலைவர் பொ.சுசீலா தலைமை வகித்தார். கோரிக்கைகளை விளக்கி செயலாளர் ப.கண்ணம்மாள் பேசினார். மாவட்டத் தலைவர் இரா.ராஜ்குமார், மாவட்டச் செயலாளர் ப.கனகராஜா, மாவட்டப் பொருளாளர் பா.ஜெயலட்சுமி ஆகியோர்ர் வாழ்த்திப் பேசினர். இதில் ஆசிரியர்கள் திரளானோர் கலந்து கொண்டு கோரிக்கை முழக்கம் எழுப்பினர்.

Leave A Reply

%d bloggers like this: