சண்டிகர்,
அரியானாவில் பனிமூட்டம் காரணமாக நடந்த சாலை விபத்தில் சிக்கி 3 பேர் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
அரியானா மாநிலம் கர்னல் மாவட்டத்தில் பனிப்புகைமூட்டம் காரணமாக பல்வேறு இடங்களில் சாலையில் சென்ற வாகனங்கள் ஒன்றோடு ஒன்று மோதி விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் 3 பேர் உயிரிழந்துள்ளனர் மற்றும் 7 பேர் படுகாயமடைந்துள்ளனர். காயமடைந்தவர்கள் அனைவரும் சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்.  இச்சம்பவம் குறித்து காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Leave a Reply

You must be logged in to post a comment.