பெங்களூரு;
‘யுனைடெட் ஸ்பிரிட்ஸ்’ சாராய ஆலை முதலாளியான விஜய் மல்லையா, இந்திய பொதுத்துறை வங்கிகளிடம் ரூ. 9 ஆயிரம் கோடி கடன்களை வாங்கி விட்டு திரும்ப செலுத்தாமல் லண்டனுக்கு தப்பியோடி அங்கேயே தங்கியிருக்கிறார்.அவரை நாடு கடத்திக்கொண்டு வர மத்திய அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது. இதுதொடர்பான இந்திய அரசின் கோரிக்கையை லண்டன் நீதிமன்றம் விசாரித்து வருகிறது.
மறுபுறத்தில், விஜய் மல்லையாவிற்கு எதிராக, அமலாக்கப்பிரிவு, வருமான வரித்துறை, சிபிஐ உள்ளிட்ட மத்திய புலனாய்வு பிரிவுகள் தொடர்ந்து வழக்குகள் மீதும் விசாரணை நடைப்பெற்று வருகிறது.

அந்த வகையில், தனது நிறுவனத்துக்கு முதலீட்டாளர்களை ஈர்ப்பதற்காக தவறான தகவல்களை காண்பித்து மோசடி செய்ததாக, மல்லையா மீது தொடரப்பட்ட வழக்கு, பெங்களூரு நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது.அப்போது, இந்திய குற்றவியல் தண்டனைச் சட்டம் 36 விதி பிரிவு 447, 448 ஆகியவற்றின் கீழ் நிறுவன சட்டம் 2013-ன் கீழ், விஜய் மல்லையா, யுபி குழும தலைமை நிதி அதிகாரி ஏ.கே. ரவி நெடுங்காடி, டெக்கான் ஏவியேஷன் நிறுவனர் கேப்டன் ஜி.ஆர். கோபிநாத், ஆம்பிட் நிறுவனத்தை சேர்ந்த அசோக் வாத்வா மற்றும் நிறுவனத்தின் முன்னணி சார்டர்ட் அக்கவுன்டெண்டுகள் உட்பட 19 பேருக்கு கைது வாரண்ட் பிறப்பிக்கப்பட்டுள்ளது.

மிக அதிக அளவு தொகைக்கொண்ட மோசடி வழக்கு என்பதால், குற்றத்தில் தொடர்புடைய 19 பேருக்கும் கைது வாரண்ட் பிறப்பிப்பதாக நீதிபதி தனது உத்தரவில் குறிப்பிட்டுள்ளார்.

Leave A Reply

%d bloggers like this: