லக்னோ,
கான்பூரில் புதிய கார் நிறுத்தம் கட்டியபோது ஏற்பட்ட விபத்தில் 2 தொழிலாளர்கள் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
உத்தரபிரதேச மாநிலம் கான்பூரில் புதிய கார் நிறுத்துமிடம் கட்டும் பணி நடைபெற்றது. அப்போது எதிர்பாராத விதமாக ஏற்பட்ட விபத்தில் 2 தொழிலாளர்கள் உயிரிழந்தனர். மேலும் 2 பேர் காயமடைந்தனர். காயமடைந்தவர்கள் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். மேலும் அந்த பகுதியில் மீட்பு பணி நடைபெற்று வருகிறது. இச்சம்பவம் குறித்த காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Leave a Reply

You must be logged in to post a comment.