திண்டுக்கல் அருகே ஜல்லிக்கட்டில் பங்கேற்று இறந்து போன எமக்கலாபுரம் காளிமுத்துவின் குடும்பத்திற்கு ஜல்லிக்கட்டு இயக்கத்தின் சார்பாக அபிசரவணன், முடக்கத்தான் மணி மற்றும் நண்பர்கள் நிவாரண நிதியாக .1லட்சம் மற்றும் கன்றுக்குட்டியுடன் கூடிய கறவை மாடும் வழங்கினர்.
கடந்த 15ம் தேதி பாலமேடு ஜல்லிக்கட்டின் போது மாடு முட்டி திண்டுக்கல் மாவட்டம் சாணார்பட்டி ஒன்றியம் எமக்கலாபுரத்தைச் சேர்ந்த காளிமுத்து என்பவர் இறந்து போனார். இவரது மறைவு செய்தியை கேள்விபட்ட ஜல்லிக்கட்டு போராட்டக்குழுவைச் சேர்ந்தவரும் நடிகருமான அபிசரவணன் மற்றும் முடக்கத்தான் மணி ஆகியோர் எமக்கலாபுரம் வந்தனர். அங்குள்ள ஜல்லிக்கட்டு நண்பர்களை சந்தித்தனர். மேலும் இறந்து போன காளிமுத்துவின் தாய் காமாட்சி மற்றும் உறவினர்களைச் சந்தித்து அறுதல் கூறினர். பின்னர் காளிமுத்துவின் சகோதரி அன்னகாமுவின் கல்வி மற்றும் திருமணச் செலவிற்காக ஜல்லிக்கட்டு நண்பர்கள் மற்றும் பேஸ்புக் நண்பர்கள் சார்பாக திரட்;டப்பட்ட ரூ.1 லட்சத்திற்கான காசோலையை வழங்கினர். 10 ஆண்டுகளுக்கு பிறகு இந்த பணத்தை எடுத்துக்கொள்ள முடியும் என்றும், மேலும் இந்த குடும்பத்திற்கு நிதி உதவி செய்ய நினைவர்கள் சகோதரி அன்னகாமுவை தொடர்பு கொள்ள ஒரு செல்போனையும் வாங்கி; கொடுத்தனர். ஜல்லிக்கட்டு நிகழ்ச்சியில் கலந்து கொண்டதால் தான் என் மகன் இறந்தான் என்ற குற்ற உணர்ச்சி இருக்கக்கூடாது என்பதற்காக அந்த குடும்பத்தின் வாழ்வாதாரத்திற்காக ஒரு கன்றுடன் கூடிய கறவை மாட்டையும் கொடுத்தனர். இந்த சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் வரவேற்பை பெற்றது

Leave A Reply

%d bloggers like this: