அரசு பேருந்து கட்டண உயர்வு குறித்து போக்குவரத்து துறை அமைச்சர் எம்.ஆர். விஜயபாஸ்கர் கூறுகையில், “கழகங்களுக்கு டீசல் விலை உயர்வுக்காக அரசு மானியம் வழங்கி வரும் நிலையிலும் வருவாய்க்கும் – செலவிற்கும் உள்ள இடைவெளி இழப்பு தினமும் ரூ. 9 கோடி நட்டம் ஏற்படுகிறது. ஆனாலும் மக்கள் நலன் கருதி கடன் சுமையை அரசே ஏற்றுக் கொண்டு நிதி நெருக்கடியை சமாளித்து வந்தது. அரசு போக்குவரத்து கழகங்கள் சிறப்பாக இயங்கவும், நிதி நெருக்கடியை சமாளிக்கவும் பேருந்து கட்டணம் இப்போது உயர்த்தப்பட்டுள்ளது. இந்த கட்டண உயர்வு தவிர்க்க முடியாதது.

7 வருடங்களாக பேருந்து கட்டணம் உயர்த்தப்படாமல் இப்போது திடீரென உயர்த்தப்பட்டதால் மக்களுக்கு பெரிய சுமை ஏற்பட்டு உள்ளதாக பலதரப்பட்ட மக்களும் கருதுகிறார்கள். எனவே இதை தவிர்ப்பதற்காக இனிமேல் நிர்வாக செலவுகளுக்கு ஏற்ப, சம்பளம், டீசல் விலை உயர்வுக்கு ஏற்ப வருடந்தோறும் பேருந்து கட்டணத்தை மாற்றி அமைக்க அரசு முடிவு செய்துள்ளது” என்றார்.

Leave a Reply

You must be logged in to post a comment.