திஸ்பூர்,

அசாம் மாநிலத்தில் இன்று காலை நிலநடுக்கம் ஏற்பட்டுள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

அசாம் மாநிலத்தில் உள்ள கோக்ரஜார் மாவட்டத்தில் இன்று காலை இலேசான நிலநடுக்கம்  உணரப்பட்டது. இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவில் 5.2 ஆக பதிவாகியுள்ளது. காலை 6.44 மணியளவில் ஏற்பட்ட இந்த நிலநடுக்கத்தால் வீடுகள் அதிர்ந்தன. இதையடுத்து வீடுகளில் இருந்த மக்கள் அலறியடித்து வெளியேறி தெருக்களில் தஞ்சம் அடைந்தனர். கடும் குளிரை பொருட்படுத்தாது மக்கள் தெருக்களில் கூடி இருந்துதனர். இந்த நிலநடுக்கத்தால் ஏற்பட்ட சேத விபரங்கள் குறித்து இதுவரை தகவல்கள் ஏதும் வெளியாகவில்லை

Leave A Reply

%d bloggers like this: