இராசிபுரம், ஜன.19-
பசுமை வீடு கட்டும் திட்டத்திற்கு அனுமதியளிக்க ரூ.15 ஆயிரம் லஞ்சம் பெற்ற வெண்ணந்துர் வட்டார வளர்ச்சி அலுவலர் கைது செய்யப்பட்டார்.

நாமக்கல் மாவட்டம், இராசிபுரம் தாலுகாவிற்குட்பட்ட வெண்ணந்துர் ஊராட்சி ஒன்றிய வட்டார வளர்ச்சி அலுவலராக பணியாற்றி வருபவர் தெய்வானை (56).இவர் பசுமை வீட்டு திட்டத்தில் வீடுகட்ட அனுமதியளிப்பதுதொடர்பாக சந்தோசம் என்பவரிடம் ரூ.15 ஆயிரம் லஞ்சம் கேட்டுள்ளார். இதுதொடர்பாக அவர் லஞ்ச ஒழிப்பு காவலரிடம் புகார் அளித்தார். இந்த புகாரின் அடிப்படையில் லஞ்ச ஒழிப்பு காவலர்கள் வெள்ளியன்று வெண்ணந்தூர் வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் திடீர் சோதனை நடத்தினர். இதில் வட்டாரவளர்ச்சி அலுவலர் தெய்வானை லஞ்சம் பெற்றது உறுதிசெய்யப்பட்டது. இதையடுத்து அவரை கைது செய்த காவலர்கள் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இச்சம்பவம் நாமக்கல்லில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Leave A Reply

%d bloggers like this: