ஈரோடு, ஜன.19-
தமிழ்நாடு அரசு சீருடைப் பணியாளர் தேர்வு வாரியம் மூலம் இரண்டாம் நிலை காவலர் பணியிடத்திற்கு 6 ஆயிரத்து 94 பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. இவற்றில் முன்னாள் படைவீரர்களுக்கு 5 சதவீதம் இடங்கள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளன. குறைந்தபட்ச கல்வித் தகுதி 10 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். இப்பணியிடத்திற்கு விண்ணப்பிக்க கடைசி தேதி 27.01.2018 ஆகும். இதற்கு விண்ணப்பமும் தகுதியும் உள்ள முன்னாள் படைவீரர்கள் 27.01.2018 ஆம் தேதிக்குள் இணையதளம் மூலம் விண்ணப்பிக்கலாம். விண்ணபித்த விபரத்தினை உதவி இயக்குநர் முன்னாள் படைவீரர் நல அலுவலகம், ஈரோடு என்ற முகவரிக்கு தெரிவிக்க வேண்டும். மேலும் விபரங்களுக்கு www.tnusrb.tn.gov.in என்ற இணையதளத்தில் தெரிந்து கொள்ளலாம் அல்லது 0424-2263227 என்ற தொலைபேசி எண்ணில் தொடர்பு கொண்டு தெரிந்து கொள்ளுமாறு ஈரோடு மாவட்ட ஆட்சியர் எஸ்.பிரபாகர் கேட்டுக்கொண்டுள்ளார்.

Leave A Reply

%d bloggers like this: