சென்னை நேரு உள் விளையாட்டு அரங்கில் நடைபெற்று வரும் 68-வது தேசிய சீனியர் கூடைப்பந்து சாம்பியன்ஷிப் போட்டியின் ஆண்கள் பிரிவில் சிக்கிம் அணிக்கு எதிரான ஆட்டத்தில் துவக்கம் முதல் ஆதிக்கம் செலுத்திய இமாச்சலப்பிரதேச அணி அபாரமாக வெற்றி பெற்றது.

முன்னதாக நடந்த போட்டியில் தமிழ்நாடு அணி 102-63 என்ற புள்ளி கணக்கில் குஜராத்தை வீழ்த்தி 2-வது வெற்றியை பதிவு செய்தது. மற்ற ஆட்டங்களில் ராஜஸ்தான் அணி கேரளாவையும், கர்நாடக அணி நடப்பு சாம்பியன் உத்தரகண்டையும் தோற்கடித்தன. இதேபோல் சர்வீசஸ், சத்தீஷ்கர், தெலுங்கானா, மேற்கு வங்கம், தில்லி அணிகளும் வெற்றி பெற்றன.

கோவா, சிக்கிம், ஜம்மு-காஷ்மீர், மகாராஷ்டிரா, ஆந்திரா அணிகள் தோல்வியை தழுவின.
பெண்கள் பிரிவில் நடந்த ஆட்டங்களில் மகாராஷ்டிரா அணி தில்லி
யையும், மத்திய பிரதேசம் கர்நாடகத்தை யும், ராஜஸ்தான் ஒடிசாவையும், கேரளம் சத்தீஷ்கர் அணியையும் வீழ்த்தின.

முன்னதாக நடந்த போட்டிகளில் நடப்பு சாம்பியன் கேரளாவுக்கு அதிர்ச்சி
அளித்த கர்நாடகம் வெற்றிபெற்றது. மற்றொரு ஆட்டத்தில் தெலுங்கானாவை பதம் பார்த்த தில்லி அணி வெற்றியை ருசித்தது. அந்த அணியில் இடம் பிடித்துள்ள இந்திய கிரிக்கெட் அணியின் பந்து வீச்சாளர் இஷாந்த் ஷர்மாவின் மனைவி பிரதிமா சிங் அதிகபட்சமாக 21 புள்ளிகள் குவித்தார்.

தமிழ்நாடு-சத்தீஷ்கர் அணி களுக்கிடையே நடந்த போட்டியில் துவக்கத்தில் அசத்திய சத்தீஷ்கர் அணி 22 புள்ளிகள் வரை முன்னிலை பெற்றது. இதனையடுத்து, சரிவில் இருந்து மீண்ட தமிழக வீராங்கனைகள் கடைசி நேரத்தில் சிறப்பாக ஆடினர்.
இதனால் இரு அணிகளும் 77-77 என்ற சமநிலையை எட்டியது. பின்னர், கூடுதலாக 5 நிமிடம் ஒதுக்கப்பட்டதில் தமிழக அணி சொதப்பியதால் சத்தீஷ்கர் அணி வெற்றி பெற்றது.

Leave A Reply

%d bloggers like this: