திருவள்ளூர் ரயில் நிலையம் இரண்டாவது நடைமேடையில், ஜார்க்கண்டைச் சேர்ந்த, பிபின் திக்பான்(32) என்பவர் இறந்து கிடந்தார். அவரது உடலை, ரயில்வே காவல்துறையினர் மீட்டு பிரேத பரிசோதனைக்காக திருவள்ளூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

உடல் அழுகிய நிலையில் இருந்ததால் பிரேத பரிசோதனை கூடத்திற்கு உள்ளே எடுத்துச் செல்லாமல், திறந்த வெளியிலேயே உடலை பிரேதப் பரிசோதனை செய்யப்பட்டதாக தெரிகிறது. இது குறித்த புகைப்படம் ‘வாட்ஸ்-அப்’களில் பரவி பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இது குறித்து, அரசு மருத்துவமனை டாக்டர் ஒருவரிடம் கேட்ட போது, ‘இறந்தவர் உடல், ஏற்கனவே அழுகிய நிலையில் இருந்ததாகவும். மேலும், பிரேத பரிசோதனை அறையில், ‘ஏசி’ இல்லை. என்பதால் உடனடியாக வெளியில் வைத்து பிரேதப் பரிசோதனை செய்யப்பட்டது’ என்று தெரிவித்தார்.

இந்த விவகாரம் தொடர்பாக சுகாதார துறை துணை இயக்குனர் தயாளனிடம் சென்னையில் உள்ள மருத்துவத்துறை இயக்குனரகத்தில் அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டனர். இதற்கிடையே திறந்த வெளியில் பிரேத பரிசோதனை செய்யப்பட்டது தொடர்பாக மருத்துவர் மற்றும் ஊழியர்கள் 3 பேர் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர். 2பேர் திருத்தணி மருத்துவமனைக்கும் ஒருவர் ஆவடி மருத்துவமனைக்கும் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.

Leave A Reply

%d bloggers like this: